ந.வினோத்குமார்
திறமையான
தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், தேசிய விருது வென்ற
நடிகர் எனப் பல முகங்கள்கொண்ட
அனுபம் கெர், இப்போது எழுத்தாளரும்கூட.
தன் வாழ்வின் அனுபவத் தொகுப்புகளை 'தி
பெஸ்ட் திங் அபௌட் யு
இஸ் யு’ (The Best Thing About You is You) என்ற புத்தகமாக்கி
இருக்கிறார். புதிய நம்பிக்கையைத் தோற்றுவிக்கும்
புத்தகத்தில் இருந்து ஒரு பக்கம்...
புதிதாய்ப்
பிறப்போம்... புதிதாய்க் கற்போம்!
இந்த
அத்தியாயத்தை நான் ஜூன் 19-ம்
தேதி எழுதுகிறேன். 'தந்தையர் தினம்’ என்று கொண்டாடப்படுகிற
அந்த நாளில் என் தந்தையுடன்
எனக்கு நேர்ந்த அனுபவம் ஒன்றை
நான் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
கீழ்
மத்தியத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தவன் நான். ஹிமாச்சலப்பிரதேச அரசு
அலுவலராக என் அப்பா சிம்லாவில்
பணியாற்றிவந்தார். அவருடைய வருமானம் குடும்பத்தை
நடத்தவே போதாமல் இருந்த நிலையில்,
ஒருநாள் என்னை நகரின் பிரபல
உணவகத்துக்கு அழைத்துச் சென்றார்.
தேர்வு
முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில், என்னைத் திடீரென்று உணவகத்துக்கு
அழைத்துச் சென்றது எனக்கு அளவில்லாத
ஆச்சர்யத்தை அளித்தது. கச்சோரிகளையும் சமோசாக்களையும் நான் விழுங்கி முடித்தவுடன்
என் தந்தை சொன்னார், 'மகனே...
உனக்கு ஒரு கெட்ட செய்தியைச்
சொல்லப்போகிறேன். நீ தேர்வில் தோல்வி
அடைந்துவிட்டாய்!’ என்றார். அவர் அரசு அலுவலராக
இருந்த காரணத்தினால், என் மேல்நிலைப் பள்ளித்
தேர்வு முடிவுகளை இரண்டு நாட்களுக்கு முன்பே
அறிந்திருந்தார்.
எத்தனையோ
பாடங்களை என் தந்தையிடம்
இருந்து நான் கற்றிருந்தாலும், என்
தோல்வியைத் தண்டிக்காமல், என்னை அவர் கையாண்ட
விதம் என்னுள் ஆழப் பதிந்திருக்கிறது.
வருடங்கள்
பல கடந்துவிட்டன. இன்று அந்த நிகழ்வை
ஒட்டிய ஓர் உண்மையை ஸ்டீபன்
கோவே எழுதிய 'தி
செவன் ஹேபிட்ஸ் ஆஃப் ஹைலி எஃபெக்டிவ்
பீப்பிள்’ (The Seven Habits of Highly Effective People) என்ற புத்தகத்தில் படித்தேன்.
அதில், உங்களின் 10 சதவிகித வாழ்க்கை உங்களுக்கு
என்ன நேர்கிறது என்பதைப் பொறுத்து அமைகிறது. மீதி 90 சதவிகித வாழ்க்கை,
அந்த நிகழ்வுகளுக்கு நீங்கள் எப்படி எதிர்வினை
ஆற்றுகிறீர்கள் என்பதைப் பொறுத்து அமைகிறது.
நம்
எதிர்வினைகள்தான் நாம் எதிர்கொள்ளும் நல்லது
கெட்டது அனைத்துக்கும் காரணம். அதனால்தான் நம்
விதி நம் கையில் என்பதை
நான் எப்போதும் நம்புகிறேன்!''
நன்றி: ஆனந்த விகடன், 01 பிப்ரவரி, 2012