வங்காள
மூலம்:
சங்கீதா பந்த்யோபாத்யாய் (Sangeeta Bandyopadhyay)
ஆங்கில
மொழிபெயர்ப்பு: அருணவ சின்ஹா (Arunava
Sinha)
ந.வினோத் குமார்
பெண்ணின்
காமம் என்பது
கடல் போன்றது.
அள்ள அள்ள
குறையாது. அருந்த
அருந்த தாகம்
தீராது... தீர்க்காது!
பசியும்,
காமமும்தான் உலகத்தை ஆட்சி செய்கின்றன என்று
சொல்லப்படுவதுண்டு. இரண்டிலும் நிறைவென்பதை
ஒருவர் எக்காலத்திலும்
எய்திவிட முடியாது.
மனிதர்களாய்ப்
பிறந்த அனைவருக்கும்
காமம் பொதுவென்றபோதும்,
அதிலும் ஆண்
காமம், பெண்
காமம் என்று
இரண்டு விதங்கள்
இருக்கின்றன. ஆண் காமம் உச்சம் தொட்டதும்
அடங்கிவிடும். அதுவும் ஓர் உடலுறவு நிகழ்வில்
ஒரு முறைதான்.
ஆனால் பெண்ணின்
காமம் அப்படியானதல்ல!
ஒரே உறவில்
பலமுறை உச்சம்
கண்டுவிடுவார்கள். இது அறிவியல்
செய்தி.
ஆனால்
நிதர்சனம் என்ன
தெரியுமா? இந்தியா
போன்ற கலாச்சாரக்
கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள நாட்டில் 100க்கு
90 பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறை
கூட உச்சம்
அடையாமல் போகிறார்கள்.
இன்னும் சொல்லப்
போனால் அவர்களுக்கு
உடலுறவில் உச்சகட்டம்
என்ற ஒன்று
இருப்பதே தெரியவில்லை
என்பதுதான் உண்மை.
செக்ஸ்
பற்றிய சரியாத புரிதல் ஆண் பெண் இருவருக்கும் இல்லாததே இதற்குக் காரணம்.
அதே
சமயம் பெண்கள்
தங்களின் ஆசைகளை
வெளிப்படையாகச் சொல்லிவிடவும் முடியாது. அதற்குக் காரணமும்
கலாச்சாரத்தைக் காட்டி பயமுறுத்தி வளர்க்கப்பட்டிருப்பதுதான். வெளிநாடுகளை விட்டுத்தள்ளுங்கள்.
இந்தப் பிரச்னை
இந்தியப் பெண்களுக்கே
உரித்தான ஒன்று.
இந்தப்
பிரச்னை இலக்கியத்தில் எதிரொலிக்காமல் இல்லை.
தமிழில் கவிதைத்
தளத்தில் பெண்ணுடல்,
பாலியல் போன்ற
விஷயங்கள் பெண்களாலும்
பேசப்பட்டிருந்தாலும் அது உரைநடை
இலக்கியத்தில் இன்னும் வளரவே இல்லை என்றுதான்
சொல்வேன். அப்படியே
இருந்தாலும் அது ஆண்களிடமிருந்துதான் அவை வந்திருக்கும்.
பெண்கள் எழுதியிருக்கிறார்களா
என்பது சந்தேகமே.
ஆனால்
வங்காள மொழியில்
அது சாத்தியப்பட்டிருக்கிறது.
முழுக்க முழுக்கப்
பெண்களின் உடல்ரீதியான
விருப்பங்களை எந்த ஆபாசமும் கலவாமல் சித்தரித்திருப்பதில்
கவனம் பெறுகிறது
'பேன்ட்டி' என்ற
தலைப்பிலான புத்தகம்.
வங்காள
மொழி பெண்
எழுத்தாளரான சங்கீதா பந்த்யோபாத்யாய் இதைப் படைத்துள்ளார்.
இந்தப் புத்தகம்
'ஹிப்னாசிஸ்', 'பேன்ட்டி' என்ற இரண்டு குறுநாவல்களைக்
கொண்டுள்ளது. வங்காள மொழியில் இருந்து நேரடியாக
ஆங்கிலத்துக்கு இதை மொழிபெயர்த்திருக்கிறார்
அருணவ சின்ஹா.
இந்த
இரண்டு குறுநாவல்களுமே
பெண்களின் காமத்தைப்
பற்றிப் பேசுகிறது
எனினும், சிறு
வித்தியாசமுண்டு. 'ஹிப்னாசிஸ்' குறுநாவலில்
ஒரு பெண்
தன் காம
இச்சைகளை அவள்
எப்படிப் பார்க்கிறாள்
என்பது பற்றிக்
கூறுகிறது. 'பேன்ட்டி' நாவலில் ஒரு பெண்ணின்
காமத்தை இன்னொரு
பெண் எப்படிப்
பார்க்கிறாள் என்பது பற்றிப் பேசுகிறது. வெறுமனே
விளம்பரத்துக்காக இப்படி தலைப்பு வைக்கிறார்கள், புத்தக
ரேப்பர்களை டிசைன் செய்கிறார்கள் என்று கடந்துபோய்விட
முடியாத படைப்பு.
நான்கு
பெண்கள் தங்களுடைய
காம இச்சைகளைப்
பற்றிப் பேசுவதாகத்
தொடங்குகிறது 'ஹிப்னாசிஸ்' நாவல்.
'..But, I wonder now, does
sleeping with more than one man amount to having a great sex life?' என்று அந்தப்
பெண்களில் ஒருத்தி
கேட்பதாக வரும்
இரண்டாம் பக்கத்திலேயே
நம்மை அதிர
வைக்கிறார் நூல் ஆசிரியர் சங்கீதா.
'Ilona Kuhu Mitra revealed that
she had been masturbating since the age of four' என்று
கதையின் நாயகி
சொல்வதாக அடுத்த
சில வரிகளிலேயே
இன்னொரு வெடி
வைத்திருக்கிறார்.
ஊடக நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இலோனா குஹு மித்ரா இசையமைப்பாளரான
மேக் ராய்
என்பவனைச் சந்திக்கிறாள்.
அது நனவா
அல்லது வெறு
கற்பனையா என்பது
அவளுக்கே மட்டும்
தெரிகிற விஷயம்.
அவன் மீது
காதல் கொள்கிறாள்.
ஆனால்
மேக் ராயோ
திருமணமானவன். தன்னுடைய 'ஈஸி கோயிங் அப்ரோச்'
மூலம் மித்ராவைக்
கவர்கிறான். நிச்சயமாக அவனுக்கு அவள் மேல்
காதல் இல்லை.
அதற்காக செக்ஸ்
வலையில் அவளை
வீழ்த்த அவன்
தனியாக முயற்சிகளும்
மேற்கொள்வதில்லை.
மித்ராவுக்கு
அவன்மேல் இருப்பது
காதலா? அல்லது
அவளின் வெறுமை
அவளை அப்படி
நம்பச் செய்கிறதா?
அவளுக்கு ஏற்பட்ட
வெறுமைக்குக் காரணம் அவள் இச்சைகள் தீராததாலா?
அவள் குழம்பிப்
போயிருக்கும் சமயம் ஒன்றில் அவர்களுக்குள் உடலுறவு
நிகழ்ந்துவிடுகிறது. ஆனால் அதற்குப்
பின் மேக்
ராய் அவளை
விட்டுச் சென்றுவிட,
அவளுக்கு எல்லாமே
குழப்பமாகவே இருக்கிறது.
அதற்குப்
பிறகு அவள்
என்ன ஆனாள்
என்பது மீதிக்
கதை. நாவல்
முழுக்க ஒரு
வகையான சர்ரியலிச
பாணி பின்பற்றப்பட்டிருக்கிறது.
கனவும் அல்லாத
உண்மையும் அல்லாத
சில நேரங்களில்
மித்ராவைப் போலவே நாமும் குழப்பத்திற்கு ஆளாகிறோம்.
இந்த
நாவலில் ஆங்காங்கே
நூலாசிரியர் கதாபாத்திரத்தினூடாக காமம் பற்றிக் கூறும்
செய்திகள் நம்மை
அசரடிக்கின்றன. பெண் காமத்தின் பல்வேறு பரிமாணங்களையும்
எடுத்துக் காட்டுகின்றன.
உதாரணமாக,
ஓர் இடத்தில்
கதாநாயகி மித்ரா
தன்னுடைய டீன்
ஏஜ்ஜில் செக்ஸ்
கதை ஒன்றைப்
படிக்கிறாள். அந்தக் கதையில் ஓர் ஆண்
படகு ஓட்ட,
அதில் ஒரு
பெண் அமர்ந்திருக்கிறாள்.
ஆணின் அழகைக்
கண்டு தூண்டுதல்
பெற்ற அந்தப்
பெண் அவனுடன்
உடலுறவு கொள்கிறாள்.
படகில் ஏறிய
நொடி முதல்
உடலுறவு முடியும்
வரைக்கும் அந்தப்
பெண் அந்த
ஆணுடன் ஒரு
வார்த்தை கூடப்
பேசிக் கொள்ளவில்லை.
இந்த அமைதியின்
காரணத்தால்தான் மித்ராவுக்கு அந்தக் கதை நினைவில்
இருப்பதாக நூலாசிரியர்
கூறுகிறார். அவரின் வார்த்தைகளிலேயே சொல்வதானால் இப்படிச்
சொல்லலாம்...
"Ilona Kuhu Mitra had
remembered the story only because of this silence. She had fantasized about it.
She had wanted to experience this silence in her own life. In her head, she
would often enter the covered section of a boat. In her mind, she often wanted
to cross a river in the darkness".
இன்னொரு
இடத்தில் இப்படி:
"...Ilona Kuhu Mitra went
home that day and flung herself on her bed, trying to masturbate. But even
rubbing herself for hours did not help. She didn't get even slightly wet. Ilona
Kuhu Mitra resorted to every possible fantasy, conjured up every illicit
relationship she could, imagined herself in bed with three or four men, even
added two or three women".
நாவலின்
ஓரிடத்தில் மித்ராவே இப்படிச் சொல்கிறாள்...
"I've always known that sex
has nothing to do with the heart. What starts with the body ends with the body.
That's why I don't believe in all these clearly defined identities like
homosexual or bisexual. Anything and anybody can give you that pleasure. Our
pleasure orientation is concentrated in such a small area. A hole or penis,
around which there are a few nerves capable of receiving the pleasure stimulus.
The rest is imagination".
சுய
இன்பம் காணும்போது
ஒவ்வொருவருக்கும் ஒரு கற்பனை இருக்கும். இந்த
நாவலின் ஆரம்பத்தில்
நாயகியின் தோழி
ஒருத்தி இப்படிச்
சொல்கிறாள்...
"Do you know what I used to
fantasize about when I began masturbating?' asked Lavanya. 'My father doing my
mother. Uff, I'd be so miserable afterwards. This is probably why I became so
distant from my parents, don't you think, Ilona?'
'If a psychiatrist heard this, he'd
call it a case of the Electra Complex', remarked Sunetra".
பெண்ணின்
காமம் முழுவதுமாக
நிறைவேறாதபோது அவள் உடலை அவளே வெறுக்கும்படி
ஆகிறது. மித்ராவுக்கு
அப்படித்தான் ஆனது. அதை நூலாசிரியர் இப்படிச்
சொல்கிறார்...
"When she stood naked before
the mirror, she saw an asexual body. Earlier, she used to feel as though a
celebration was under way all over her body, like a village fair".
புத்தகத்
தலைப்பான 'பேன்ட்டி'
நாவல் இரண்டாவதாக
வைக்கப்பட்டுள்ளது. இதிலும் அதே
சர்ரியலிச பாணி.
இந்தக் கதையில்
ஆளில்லாத ஒரு
அபார்ட்மென்ட் வீட்டுக்கு நாயகி வருகிறாள். அங்கு
அவள் வேறு
ஒரு பெண்ணின்
பேன்ட்டியைப் பார்க்கிறாள். அப்போது அவளுக்கு இன்னொரு
பெண்ணின் காமத்தைப்
பற்றிய சிந்தனைகள்
ஏற்படுகின்றன. அதைத்
தொடர்ந்து அவளுக்குள்
கேள்விகளும் எழுகின்றன.
"A woman who wears a
leopard-print panty must be wild by nature. At least when it comes to sex. The
question was, how wild? Wilder than me, or not as much?"
(இந்தப்
பதிவைப் படிக்கும்
பெண்களில் யாரேனும்
மேற்குறிப்பிட்ட 'சிறுத்தைத் தோல் வடிவ பேன்ட்டி'
அணிகிற பழக்கம்
இருந்தால், இந்த நூலாசிரியர் சொல்வது போன்று
குறைந்தபட்சம் செக்ஸ் விஷயத்திலாவது நீங்கள் தீவிரமாக
இருக்கிறீர்களா என்பதை சிந்தித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்..!)
இதிலும்
நாம் எதிர்பாராத
வகையில் பெண்
காமம் கையாளப்பட்டிருக்கிறது.
உதாரணத்திற்கு இவை:
"..Yes, showering naked.
Yes, she had soaped herself. Yes, she would soap herself again with you in mind
and, placing her hand on her private parts, say exactly thrice - 'I'm yours,
I'm yours, I'm yours'.
மார்பகப்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் தன்
மார்பக வலியைக்
கூட தனது
காமத்தின் மூலம்
எப்படி தீர்த்துக்
கொள்கிறாள் என்பதை நூலாசிரியர் இப்படிச் சொல்கிறார்...
"...She thrusts the nipple
towards your lips.
---This was what I asked you to
come for. Because it was hurting - I can't scratch it..."
இவை
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு பெண் தான்
சுவைத்த ஆணின்
விந்து எப்படிப்பட்ட
சுவையுடையதாய் இருக்கிறது என்பதை அந்தப் பெண்ணே
இப்படி எழுதுகிறாள்:
"...She went back home. And
wrote the same day, 'I know the taste of sperm!' She described the taste. 'The
juice from sliced and grated tender green shoots of wheat, ten days after the
seeds were planted in soft earth, tastes exactly like sperm. Just like the
beating heart of the wheat seedlings in that juice, the spirit of life can be
clearly discerned when drinking sperm. When the liquid slides down the tongue,
its effervescence spreads all the way to the windpipe'. Dying without getting
to know this extraordinary taste is a failure of being born as a woman. It is
the duty of a man to help a woman experience this unique taste. This helping
hand is known as love".
நூலின்
சில இடங்களில்
மொழியை லாவகமாகப்
பயன்படுத்துகிறார் சங்கீதா. ஓரிடத்தில்
இப்படிச் சொல்கிறார்..
"Ilona usually left office before the sun punctured the night sky with a
pin".
இன்னொரு
இடத்தில் இப்படி..
"Apart from the friends, family, colleagues and work associates in our
lives, there are some people whom we have never met, never spoken to, who do
not know us, who think of us as collective nouns - viewers, audience, citizens,
voters and so on".
வேற்று
மொழி புத்தகத்தைப்
படித்துக்கொண்டிருக்கிறோம் என்கிற சலிப்பே
தட்டாமல் இருக்கிறது
மொழிநடை. தங்களின்
தாய்மொழியில் நேரடியாகப் படிப்பது போன்ற சுகத்தைத்
தந்த விதத்தில்
அருணவ சின்ஹாவின்
புலமை புலப்படுகிறது.
இந்தப்
புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் தமிழில் இதுபோன்று
ஒரு படைப்பு,
பெண்களிடமிருந்து வராதா என்று ஆயாசப்பட்டுக் கொள்ள
மட்டுமே முடிந்தது.
ஏனெனில், 'யோனி
கடுக்கிறது' என்று எழுதியதற்கே பொங்கி எழுந்த
கலாச்சாரக் காவலர் கூட்டமல்லவா நாம்?
Courtesy: Girl wearing panty image - Amazon.com