Sunday, November 23, 2014

'Silk' gets its share of worms


N Vinoth Kumar
Published: 04th June 2013

Italian writer Alessandro Baricco’s novel Seta, translated into English as Silk, is like a game of chess — each chapter is a move.  

The author’s style of narration is such that there’s a limited number of characters in this novel with short chapters.


Baricco, also a film director and performer, has 10 novels to his credit.   ‘Silk’ is a triangular love story which brings the landscape of Italy and Japan together. The protagonist Herve Joncour, a youth in his thirties, is a former army man and is engaged in silkworm trade.

When a disease invades the silkworms and spreads to the whole of Europe,  Joncour travels to Japan to smuggle in good quality silkworms. There, he meets a Japanese girl.

Every time he travels to Japan, he meets the girl and they fall in love without speaking a word. On their last meeting, the girl gives him a letter which says, ‘Come Again or I will Die’. The events following this set the plot of the novel.

The story is set in the backdrop of the 1860s, when electricity was just an imagination and Japan was considered the “end of the world.”

Throughout the story the author uses an imagery way of story-telling to correlate the circumstances. For example, whenever the author tries to describe the Japanese girl, he puts it in Joncour’s voice. The novel was later adapted into a film with the eponymous title and today, it has been translated into nearly 37 languages. “Even translations have their own soul,” said the author.

Recently, the novel was translated in Tamil as ‘Pattu’ by poet Sugumaran and brought out by Kalachuvadu Pathippagam.

 
Baricco arrived in Chennai on Saturday to launch the Tamil translation followed by a discussion at Amethyst. Baricco spoke to City Express about his way of writing and  his school of story-telling.

“Though the story is not a  real life incident, the details about the silkworm trade are very true. In the 19th century, Europeans entered Japan in search of good quality silkworms. Before going to Japan, they went to Africa.” he said. Speaking about his style of narration, he said, “It is not a technique, but my way of writing. In this novel in particular, the story unfolds like a game of chess. Each small piece of story is a move. Every time the story moves in and around, but never stops. This keeps the reader  completely engaged.”

“Also, I have used limited number of characters. It is not demanded by the story but I decided to limit the characters. Moving a story with limited characters is like geometry,” he added.

When asked about the popularity of the book and whether it would be his classical work, Baricco said, “For every writer, one or two books of his/her will become popular either during lifetime or after death. I am lucky that I have been able to catch the attention of so many readers through this book, that too in my lifetime. But it is too early to say if this is my classical work.”
 

Explaining the travelogue nature of this novel, he said, “ I like travelling. Before I began to write this book, I did a lot of ground work like visiting museums to know about the silkworm trade in early days.”

Talking about his school of storytelling, Scuola Holden, Baricco said, “I started this school 20 years ago along with my friends. We were interested in sharing our experiences with the younger generation. Here we teach cinema, theatre, television production, journalism and book-writing. Whatever be the course one chooses, he or she should learn story-telling and it is part of their curriculum.”

This October, Barico is to start a new edition of the school internationally in Torino, where Indian students are also welcome.

Clearing doubts on whether the art of writing could be taught and writers moulded by teaching, he said, “Each one has several talents. But one must discover a talent that brings out his voice. That’s what we are doing here. We help the students discover their voice”.

Courtesy: The New Indian Express

Monday, November 10, 2014

இந்தக் கவிதைகளின் நிறம் பச்சை!


ந.வினோத் குமார்

குல்சார்!

இந்தியத் திரைப்பட வரலாற்றில் தவிர்க்க இயலாத ஒரு பெயர். கவிஞர். பாடலாசிரியர். வசனகர்த்தா எனப் பன்முகம் கொண்டவர். 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கு இவர் எழுதிய 'ஜெய் ஹோ' பாடல் இவருக்கு ஆஸ்கர் விருதைப் பெற்றுத் தந்தது.

திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதாத நேரத்தில் தனது கவிதைகளின் மூலம் வசீகரிக்கும் இவர், இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தில் தான் எழுதிய இயற்கை சார்ந்த கவிதைகளை 'க்ரீன் போயம்ஸ்' என்ற பெயரில் தொகுப்பாகக் கொண்டு வந்தார்.

அந்தத் தொகுப்பை இந்தியில் இருந்து ஆங்கிலத்தில் முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி பவண் கே.வர்மாவால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 
 
 
அந்தப் புத்தகத்தில் இருந்து சில கவிதைகள்...
 
ஒரு நதியின் கதை

இது ஒரு நதியின் கதை
ஒருநாள் கவிஞனை கேட்டது
தினமும் என்னை இருகரைகளும் சுமக்கின்றன‌
என்னை வழிநடத்துகின்றன‌
தினமும் என் முதுகில்
அக்கரைக்குப் படகுகளைச் சுமந்து செல்கிறேன்

தினமும் வாலிபர்களைப் போல‌
என் நெஞ்சில் எதையேனும் எழுதுகின்றன அலைகள்

எதுவும் நடைபெறாமல்
எந்த நாளேனும் இருக்காதா
ஒரு மாலைப் பொழுதேனும்
எனது முதுகைச் சாய்த்துக்கொள்ளவும்
எதுவும் செய்யாமல் கிடக்கவும் இயலாதா
வாசித்த பின் அசைவற்றிருக்கும்
ஒரு கவிதையைப் போல...

வனம்

வனம் புகுகையில் எனது முன்னோர்கள்
என்னைச் சூழ்ந்திருப்பதாய்த் தெரிகிறது
பிறந்த குழந்தையாய் என்னை உணர்கிறேன்

மரங்கள் என்னைத் தூக்கிச் சுமக்கின்றன‌
பூச்சொறிகின்றன, நீர்த் தெளிக்கின்றன‌
மடியில் வைத்துத் தாலாட்டுகின்றன‌

அவை
நான் நடக்கத் தொடங்கிவிட்டதாகவும்
அவர்களைப் போல் ஒரு நாள்
பூமியில் வேரூன்றி சூரியனைப் பிடிக்க‌
முயற்சிப்பேன் எனவும் சொல்கின்றன‌

மரம் மேலும் சொன்னது:
நீ இப்போதுதான் பூமிக்கு வந்திருக்கிறாய்
நீ அலைந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறேன்
எனது கிளையில் நீ ஏறலாம் இறங்கலாம்
என்னைச் சுற்றி வரலாம்
என்னைவிட்டு ஓடிச் செல்லலாம்
திரும்பி வராமல் போகலாம்
அல்லது அந்த மலைகளின் ஒருபகுதியாய் மாறலாம்

இருந்தும்
உன்னில் ஓடும் நீர்
உன்னில் உள்ள மண்
அவை நாங்கள் தந்தது
என்னில் நீ மீண்டும் விதைக்கப்படுவாய்
என்னிடம் நீ மீட்டுத் தரப்படுவாய்.
 
மரங்கள்

மரங்கள் சிந்திக்காத‌போது
மலர்கள் மலர்ந்தன‌
அவற்றின் விரல்கள்
வெயிலில் அமிழ்கின்றன‌
அசையும் கிளைகளில்
எண்ணங்களை எழுதுகின்றன‌
பல வண்ணங்களில்
பல வார்த்தைகள் பறிக்கின்றன‌
மணத்தால் உரையாடுகின்றன‌
மனிதர்களை உறவாட அழைக்கின்றன‌

ஆனால் பாருங்கள்

மணம் வீசும் எதையும்
மறுகனம் கொய்வது
மனித இயல்பு!

 
நிலாவாசிகள்

நாங்கள் நிலவுக்குப் புதியவர்கள்
காற்றில்லை
நீரில்லை
தூசியில்லை
குப்பையில்லை
சப்தமில்லை
செயலில்லை
புவியீர்ப்பு விசையில்லை ஆதலால்
பாதங்கள் தரையில் இல்லை
எடை பற்றிய உணர்வில்லை

திரும்பிச் செல்வோம்
எவ்வளவுதான் மோசமாய் இருந்தாலும்
நமக்குப் பழக்கமானது பூமிதான்!

 
இலையுதிர் காலத்தின் வருகை

இதுவரை இலைகள் உதிரவில்லை
இலையுதிர் காலமோ
வெளியில் நின்றிருந்தது
பொன் நிறத்தில்
புத்தனின் காதுகளைப் போன்று
தொங்கிக் கொண்டிருந்த இலைகள்
ஒற்றை வார்த்தைக்காகத் தவமிருந்தன:
'அந்தக் கிளைகளை விட்டு வாருங்கள்
பிணைப்புகளை உடையுங்கள்
உங்களை விடுவிக்க வருகிறது காற்று!'
 
நன்றி: தி இந்து