Tuesday, September 8, 2015

"மோடி செய்வது கிளைமேட் ஆசனம்!"- சுற்றுச்சூழல் முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நேர்காணல்



ந.வினோத் குமார்
பதிப்புத் தேதி: ஆகஸ்ட் 29, 2015
 
அரசியலில் சவாலான சில அமைச்சகங்கள், விஷய ஞானம் உள்ள சிலருக்குச் சில நேரம் கிடைத்துவிடுவதுண்டு. அப்படி ஒரு சவாலான அமைச்சகம், மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை. கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது ஜெய்ராம் ரமேஷுக்குக் கீழ் இந்த அமைச்சகம் 2009-ல் செயல்பட்டது. சுற்றுச்சூழல் சட்டங்கள் சமீபகாலத்தில் ஓரளவுக்காவது கடைப்பிடிக்கப்பட்டன என்றால், அதற்கு ஜெய்ராம் ரமேஷ் இட்ட அடித்தளம்தான் காரணம்.

அந்த அமைச்சகத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டதே, அவர் ஒரு சிறந்த ஆட்சியாளர் என்பதற்குச் சான்று. திறமையான ஆட்சியாளர்கள் அடிக்கடி இடமாற்றலுக்கு உள்ளாவது 'அரசியலில் சாதாரண விஷயம்'தானே!

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டம் குறித்து 'லெஜிஸ்லேட்டிங் ஃபார் ஜஸ்டிஸ்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

தான் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த காலம் பற்றி 'கிரீன் சிக்னல்ஸ்' எனும் தலைப்பில் சமீபத்தில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ள அவர், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் 90-வது பிறந்தநாள் விழாவுக்காகச் சென்னை வந்திருந்தபோது பேசியதிலிருந்து...

நீங்கள் அமைச்சராக இருந்தபோது, பி.டி. கத்திரிக்காய் ஆய்வுகளுக்குத் தடை விதித்தீர்கள். தற்போது பி.டி. பருத்தி பயிர் செய்யப்பட்ட இடங்களில்தான் விவசாயிகள் தற்கொலை அதிகமாக நடப்பதாக அமெரிக்க ஆய்வு ஒன்று கூறுகிறது. நீங்கள் இதை எப்படி அணுகுகிறீர்கள்?

நாட்டில் இன்று 98 சதவீத விவசாயிகள் பி.டி. பருத்தியை விளைவிக்கிறார்கள். ஏனென்றால், அவர்களுக்குப் பணம் தேவை. எங்கெல்லாம் பாசன வசதி உள்ளதோ, அங்கெல்லாம் பி.டி. பருத்தி நல்ல லாபத்தைக் கொடுத்தது. ஆனால், பெரும்பாலான விவசாயிகள் மழையை எதிர்பார்த்திருக்கும் இடங்களில், அதை விளைவித்தார்கள். அங்கே பலன் கிடைக்கவில்லை. அதனால்தான் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது அங்கே அதிகமாக நடக்கிறது.

2002-ம் ஆண்டு பி.டி. பருத்தி அறிமுகம் செய்யப்பட்டபோது, பருத்தி விளைச்சல் சுமார் 20 சதவீதம் அதிகரித்தது என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். இதையெல்லாம் பயன்படுத்தாதீர்கள் என்று விவசாயிகளைக் கட்டாயப்படுத்துவதற்கு, நாம் கம்யூனிச நாடு கிடையாது.

தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தைக் கொண்டுவந்ததே நீங்கள்தான். 'ஆனால், அது என் மீதே பல நேரங்களில் குற்றம் சுமத்தியிருக்கிறது' என்று உங்கள் புத்தகத்தில் கூறியிருக்கிறீர்கள். அதனுடைய இப்போதைய செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?

நீங்கள் குறிப்பிடும் குற்றச்சாட்டு மஹான் நிலக்கரி சுரங்க நிறுவனம் தொடர்பானது. ஒரு பக்கம் அந்த நிறுவனம், ‘சுரங்கப் பணிகளில் ஈடுபடுவதற்குத் தேவைப்படும் அனுமதியை ஜெய்ராம் வழங்கவில்லை' என்று குற்றம்சாட்ட, இன்னொரு பக்கம்அந்த நிறுவனத்துக்கு அனுமதி வழங்க நான் முயற்சிக்கிறேன்' என்று பசுமைத் தீர்ப்பாயம் குற்றம் சாட்டியது.
பசுமைத் தீர்ப்பாயம் என்பது சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை மட்டுமே விசாரிப்பதற்கான ஒரு நீதிமன்றம். அது சுதந்திரமாக இயங்க வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே, நான் கூறி வந்திருக்கிறேன். இப்போதும் அவை அப்படியே இயங்கிவருகின்றன.


மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் (ஜி.டி.பி.) பதிலாகதேசியப் பசுமைக் கணக்கு' (கிரீன் நேஷனல் அக்கவுண்ட்ஸ்) கணக்கிடப்பட வேண்டும் என்று கூறிவருகிறீர்கள். இந்தியாவில் இது சாத்தியம்தானா?

நாம் இன்று ஜி.டி.பி.யை மட்டுமே கணக்கிட்டு வருகிறோம். ஆனால், அந்த உற்பத்தி அளவை அடைவதற்காக நாம் சுற்றுச்சூழலை எவ்வளவு அழித்திருக்கிறோம் என்பது குறித்துக் கணக்கிடுவதில்லை. அவ்வாறு நாம் இழந்த சுற்றுச்சூழல் வளத்தைக் கணக்கிட வேண்டும். அப்படிச் செய்தால்தான், அந்த வளத்தை நாம் நிர்வகிக்க முடியும். அப்போதுதான், அந்த வளம் காப்பாற்றப்படும். ஆனால், இதற்கு அரசியல் ஆதரவு அத்தியாவசியம்.

நீங்கள் அமைச்சராக இருந்தபோது டாடா குழுமத்துக்கு உதவுவதாகக் கிரீன் பீஸ் அமைப்பு குற்றம்சாட்டியது. இப்போது அந்த அமைப்பே தடை செய்யப்பட்டுள்ளதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

மாற்றுக் கருத்து கொண்ட தொண்டு நிறுவனங்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். ஆனால் இன்றுதான், என்.ஜி.. நிறுவனங்களை என்.. ஜி.. (NGO - NO GO), அதாவது, ‘நோ கோ' நிறுவனங்களாக மோடி அரசு மாற்றிவிட்டதே!

மத்திய அரசு, டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் நியமித்தஉயர்நிலைக் குழு' அறிக்கை சூழலைச் சூறையாடுவதாக அமைந்திருக்கிறதே. இதற்குக் காங்கிரஸிடமிருந்து எந்த எதிர்ப்பும் வந்ததாகத் தெரியவில்லையே?

நம் நாட்டில் இருக்கும் சுற்றுச்சூழல் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்வதற்கான அறிக்கையாகத்தான், அந்தக் குழுவின் அறிக்கை அமைந்துள்ளது. அந்த அறிக்கையின் பரிந்துரைகளைச் செயல்படுத்தினால் பேரழிவுதான் ஏற்படும். ‘இப்படி அறிக்கை வேண்டும்' என்று அந்தக் குழுவுக்கு மத்திய அரசு கட்டளையிட்டது. அப்படியே செய்திருக்கிறார்கள், அவ்வளவுதான்!

பா... அரசு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பெயரைசுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம்' என்று மாற்றியிருப்பதன் மூலம் சூழலியலைப் பாதுகாப்பதில், அதிக அக்கறையுடன் இருப்பதாகக் காட்டிக்கொள்கிறது. இந்த யோசனை ஏன் காங்கிரஸுக்குத் தோன்றவில்லை?

இப்படி அமைச்சகத்தின் பெயரை மாற்றுவதெல்லாம் ஏமாற்று வேலை. பருவநிலையைச் சமாளிப்பதில் இந்த உலகத்துக்கே வழிகாட்டியாக, இந்தியா இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், உள்நாட்டிலோ இயற்கை வளத்தை அழிக்க முயற்சிக்கும் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியத்தின் அறிக்கையைச் செயல்படுத்த நினைக்கிறார். ஒன்று நேராக இருக்க, இன்னொன்று தலைகீழாக இருக்கிறது. இதன்படி, மோடி செய்வதுகிளைமேட் ஆசனம்'!

சமீபத்தில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பசுங்குடில் வாயுக்களை வெளியேற்றுவதில் இந்தியா அதிகப் பங்கு வகிப்பதாகக் கூறியிருந்தது. அதைச் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுத்தார். உங்கள் கருத்து?

பிரகாஷ் ஜவடேகர் மறுத்தது சரியே! காரணம், இன்று உலக அளவில் பசுங்குடில் வாயு வெளியேற்றத்தில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. இந்தியா வெளியிடும் பசுங்குடில் வாயுவின் சதவீதம் 6 சதவீதம் மட்டுமே. 29 சதவீதத்துடன் சீனா முதலிடத்திலும், 16 சதவீதத்துடன் அமெரிக்கா இரண்டாம் இடத்திலும், 11 சதவீதத்துடன் ஐரோப்பிய யூனியன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. 5 சதவீதத்துடன் ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது.

ஆனால், சுற்றுச்சூழல் சட்டங்களை மதிக்காமல் காடுகளை எல்லாம் அழிக்கும் நிலை தொடர்ந்தால், 2030-ம் ஆண்டு 15 சதவீதத்துடன் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கும். அப்போது அமெரிக்கா வெளியேற்றும் பசுங்குடில் வாயு சதவீதம் குறைந்திருக்கும்.

டிசம்பரில் பாரிஸ் நகரத்தில் நடக்கும் பருவநிலை மாற்றம் தொடர்பான விவாதக் கூட்டத்தில் இந்தியா எவ்வாறு செயலாற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

பருவநிலை மாற்றத்தைப் பொறுத்தவரையில் வேறு எந்த நாட்டைவிடவும் இந்தியாவுக்கு அதிக ஆபத்துகள் இருக்கின்றன. முதலாவதாக, நாம் பருவ மழையை நம்பியிருக்கிறோம். இரண்டாவதாக, இமயமலையில் உள்ள பனிக்கட்டிகள் உருகிக்கொண்டேவருகின்றன. மூன்றாவதாக, நமது பொருளாதார வளர்ச்சிக்காகக் காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை அழித்து வருகிறோம். நான்காவதாக, நமது நாட்டில் பெரும்பாலான மக்கள் கடற்கரையோரம் வாழ்ந்து வருகிறார்கள். பருவநிலை மாற்றத்தின் பாதிப்பு இந்த நான்கின் மீதும் இருக்கும். அப்போது நம்மால் எதிர்கொள்ள முடியாத விளைவுகள் ஏற்படும்.

இந்நிலையில் தற்போது எல்லோரின் கண்களும் இந்தியாவின் மீதுதான் இருக்கின்றன. 2030-ம் ஆண்டுக்குள் தாங்கள் வெளியிடும் பசுங்குடில் வாயுக்களின் அளவைக் குறைத்துவிடுவோம் என்று சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சமீபத்தில் அறிவித்துள்ளன.

இந்தியா தனது நிலை குறித்து, இன்னும் ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற டிசம்பர் மாதக் கூட்டத்தில், இந்தியா மூன்று அறிவிப்புகளைச் செய்யலாம் என்று கூறப்படுகிறது. ஒன்று, கோபன்ஹேகன் கூட்டத்தில் பசுங்குடில் வாயுவை 25 சதவீதமாக 2020-ம் ஆண்டுக்குள் குறைப்போம் என்று இந்தியா முடிவெடுத்தது. 2020 எனும் அந்தக் கால அளவை நீட்டிப்போம் என்று இந்தியா அறிவிக்கலாம்.

இரண்டாவது, 2022-ம் ஆண்டுக்குள் மரபுசாரா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அளவை அதிகரிப்போம் என்று அறிவிக்கும். இன்று இந்த எரிசக்தி 30 கிகாவாட் அளவில் இருக்கிறது. இதை 2022-ம் ஆண்டுக்குள் 195 கிகாவாட் ஆக உயர்த்துவோம் என்று அறிவிக்கும்.

மூன்றாவதாக, நமது எரிபொருள் சிக்கனத்தை 25 சதவீதமாக அதிகரிப்போம் என்று அறிவிக்கும்.

ஆனால், நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதைக் குறைப்போம் என்பதை மட்டும் இந்தியா இப்போதைக்கு அறிவிக்காது.

காங்கிரஸ் கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் 'emergency clause' பிரிவின் கீழ் நில உரிமையாளர்களிடமிருந்து அனுமதி பெறாமல் நிலத்தை எடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், எவையெல்லாம் 'எமர்ஜென்ஸி' என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. இதைப் பா... தவறாகக் கையாளக்கூடிய வாய்ப்பு இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?

காங்கிரஸ் கொண்டுவந்த சட்டத்தில் இயற்கைப் பேரிடர் சமயங்களின்போதும், ராணுவத் திட்டங்களுக்காகவும் என இரண்டு விஷயங்களுக்காக மட்டுமே 'எமர்ஜென்ஸி' பிரிவைப் பயன்படுத்தி நிலம் கையகப்படுத்த வழிவகை இருந்தது.

ஆனால், பா... கொண்டுவரும் சட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்காகக்கூட மேற்கண்ட பிரிவைப் பயன்படுத்தி நிலத்தை அபகரிக்கலாம். இது 1894-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் இருந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைத் திரும்பவும் கொண்டுவரும் முயற்சி. ஆனால் இப்போதுதான் அவர்கள் (பா...) ‘யூ டர்ன்' அடித்து நிற்கிறார்களே. அதனால் புதிதாகக் கொண்டுவரும் மசோதாவில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்


உணவு உற்பத்தியில் நாம் எப்போது தன்னிறைவு அடைவோம்?

தன்னிறைவு அடைவதை விடுங்கள். நிச்சயமாக உணவை முன்பைவிட அதிகளவு பெருக்கி யிருக்கிறோம். ஆனால், அதை முறையாக விநியோகிப்பதில்தான் பிரச்சினை. அதைக் களைந்தாலே நாட்டில் வறுமையை ஓரளவு சமாளித்துவிட முடியும்!

எந்த அமைச்சகத்துக்குப் பொறுப்பேற்றாலும் அங்கு முதலில் கண்ணாடிக் கதவுகளை வைப்பேன்’, என்று உங்கள் புத்தகத்தில் சொல்லியிருக்கிறீர்கள். அதே அளவு வெளிப்படைத்தன்மையை நீங்கள் காட்டியிருப்பதாக நினைக்கிறீர்களா?

நிச்சயமாக! என்னுடைய அமைச்சரவை காலத்தில் நான் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டிருக்கிறேன். ஆனால் அந்தக் கண்ணாடிக் கதவுகள், இப்போது எதுவும் தெரியாத மரக் கதவுகளாகி விட்டன!

நன்றி: தி இந்து (சில மாற்றங்களுடன்)

Wednesday, August 5, 2015

Contemporary guide to nuclear energy


By N Vinoth Kumar
Published: 25th April 2013

On April 26, 1986, the world witnessed one of the major nuclear disasters in the then Soviet Union. The Chernobyl Nuclear Power Plant at Ukraine met with an explosion and a vast amount of radioactive particles released in the atmosphere. After 27 years, the world still remembers the disaster and commemorates the day with an annual rally ‘Chernobyl Way’.

At this juncture, it is worth reviewing a book launched at a meeting organised by PECOSE here, with critical and crucial information on nuclear energy.

The book titled Nuclear Energy Today: The Reality – A Critical Analysis was brought out by People’s Committee for Safe Energy (PECOSE) recently. The book contains information pertaining to the use of nuclear energy and the misconceptions over India’s atomic obsession. The book exposes the demerits of nuclear energy at large, through various incidents that happened in the past.
 

 The book starts with early warnings such as the accidents at Narora Nuclear Plant in Uttar Pradesh and Kakrapar Nuclear Plant in Gujarat and how the disasters were managed by the local people and the workers of the nuclear plant. It alleges that those who put their life at stakes to bring down the impact of the accidents “remained unnamed” by those nuclear establishments.

A brief history of the emergence of ‘nuclear obsession’ in the nation has also been traced in this book. It sheds light on the scientist Meghnad Saha, who emphasised on the democratic participation of all stakeholders like people, government and nuclear companies before embarking on nuclear projects.  It quotes historian Ramachandra Guha saying, ‘the most secretive institution in India!’, referring to the Atomic Energy Commission formed in 1948.

The book also brings the reasons and genuine pleas behind the KKNPP struggle to focus. One of their concerns that nuclear accidents can happen either in the form of operational errors as Chernobyl or mechanical failures as the Three Mile Island or even a natural disaster like Fukushima, gets prime focus in the book.

The topics of this book range from ‘untenable claims of using nuclear energy’ to ‘reliable possibilities of using alternative sources’. But the book limits itself on some of the topics such as working mechanism of VVER used in KKNPP and India’s ‘3-Stage Nuclear Program’ by giving only little information. If those topics were explained better, the book would definitely be a guide for those interested in knowing the reality behind nuclear energy.

“While, the debate over nuclear energy has gripped the intelligentsia as well as the common public, PECOSE feels that there should be an effort to promote a rational discourse and not desk-thumping. As a first step, we have brought out this book,” says Prof Dhruba Mukherjee, Convenor, PECOSE, in the foreword of the book.

Courtesy: The New Indian Express

Saturday, July 4, 2015

The origin of Idharkuthane Aasaippattaai Balakumara…


N Vinoth Kumar
Published Date: Apr 17, 2013 

Idharkuthane Aasaippattaai Balakumara! The phrase, which was familiar only to readers of writer Balakumaran novels until a few years ago, became a popular dialogue after it found a place in film comedy sequences. In the latest development, a new film starring actor Vijay Sethupathi of Naduvula Konjam Pakkatha Kaanom fame has been named for the phrase and is directed by Gokul, who made his debut with Rowthiram starring actor Jiiva.

After film names that were the first line of hit songs, it seems the turn of popular dialogues to turn into film titles. Popular songs that were later used as film titles include Unnai Vaazhthi Paadukiren and Naan Pesa Ninaippadhellam, and more recent films are Thenmerku Paruvakkaatru, Neethane En Ponvasantham among others. Now with Idharkuthane Aasaippattaai Balakumara (IAB), a new trend has been set.


The phrase was coined by writer Balakumaran. After working in a tractor company for a while, Balakumaran started writing poems and short stories. He shot to fame with his debut novel Mercury Pookkal. His other novels, among them Irumbu Kuthiraigal, Pachai Vayal Manadhu, Ezhil and Muthukalo Pengal, were well received.

While rising as a popular writer, Balakumaran wanted to get into the ‘dream factory’, a term coined by late writer Sujatha to refer to the film industry. When he approached popular film personalities for their opinion, they all discouraged him except Kamal Haasan.

Balakumaran entered the film industry as an assistant director for Sindhu Bhairavi directed by K Balachander. Director S M Vasanth of popular films Keladi Kanmani and Aasai was also an assistant director with Balachander then. Balakumaran slowly learnt the nuances of the film industry and rose as a dialogue writer. He penned dialogues for many famous films like Nayagan, Guna and Gentleman. Idhu Namma Aalu starring Bhagyaraj was his first and, to date, last directorial venture.

Balakumaran wrote about his experiences in the film industry as a small memoir titled Idharkuthane Aasaippattaai Balakumara. It was serialised in Kumudham, a Tamil weekly magazine, before being published as a book.


While this is the lesser known history behind the phrase, there are many ardent readers of Balakumaran novels who say this phrase is used in many of his autobiographical sketches whenever he achieved something against all odds.

But others maintain that even before Balakumaran, the late writer T Janakiraman in his magnum opus Mogamul used the phrase Idharkuthane aasaippattaai as spoken by one of the lead characters Jamuna to the protagonist Babu.

Now, as the title of a film it has led to rising expectations, especially as the film is said to be a comedy entertainer.

Courtesy: The New Indian Express

 Post Script: For those who are interested to read the novella, you can click the below link:

 http://www.mediafire.com/download/5r44tmkwz7que7h/Itharkuthaane+Aasaipattai+Balakumaraa.pdf

Thursday, June 4, 2015

Wangari Maathai’s life in brief in Tamil


By N Vinoth Kumar
Published: 02nd April 2013

When the world is celebrating the 73rd birth anniversary of renowned environmentalist Wangari Maathai, a new book titled Maatrathukkaana Pengal – Wangari Maathai that was released here brings out the life and work of Maathai in brief. The main aim of bringing out this book is to introduce the great environmentalist to common people and to remember her at a time of pro-environment struggles.

Poovulagin Nanbargal, a concerned group of citizens working towards environment protection and development, has published this book. This is the seventh book in the series of eco-feminism.

Wangari Maathai, born in Ihithe, Kenya on April 1, 1940, got her education at the University of Pittsburgh and the University of Nairobi. In 1977 she founded the ‘Green Belt Movement’, an environmental organisation to plant trees. She served as assistant minister for Environment and Natural Resources during the presidentship of Mwai Kibaki between 2003 and 2005. In 2004 she was awarded the Nobel Peace Prize, the first African woman and the first environmentalist to receive the Peace Prize. She succumbed to cancer in 2011.

The book Maatrathukkaana Pengal – Wangari Maathai is a collection of essays about Maathai that were published in various magazines and penned by well-known environmental activists like Adhi Valliappan, Arachalur Selvam, Kavitha Muralidharan, R Senthil and Sivagnanam. The book includes original articles and translations of Maathai’s Nobel lecture and interviews.


The book has much unknown information about Maathai, like that she was the first woman from the East and Central African countries to get a degree and to work as head of one of the departments of the University of Nairobi.

It also has the little known information that the Nobel Prize committee, for the first time, considered environmental activism as an effort to bring peace in the world and awarded the Peace Prize to Wangari Maathai for her contribution to sustainable development, democracy and peace. The book also contains details about Maathai’s personal life including her husband’s statement that Maathai’s education was a reason for their divorce as he was ‘unable to control her’.

The book traces her struggle in the 1980s when she was arrested for opposing the construction of a complex at Uhuru Park and her initiative ‘Green Belt Movement’ also finds prime space. Through her initiative more trees were planted, which provided employment opportunities to nearly 80,000 women in African countries. She made trees a symbol of the struggle against politics, which she thought exploited environment. She once said, “It’s the little things citizens do. That’s what will make the difference. My little thing is planting trees.” 

While other environmentalists spoke about the three Rs — Reduce, Reuse and Recycle — Maathai was the first environmentalist to introduce the fourth R — Repair.

“When women have seeds in their hands, the world will witness peace. Maathai herself became a seed and she grew up like a tree that resulted in conserving forests. She became our identity and a force behind us to protect environment,” says the foreword in the book by Poovulagin Nanbargal.

Courtesy: The New Indian Express

Saturday, May 23, 2015

பறவைகளின் உயிர் யார் கையில்?


. வினோத்குமார்
பதிப்பிக்கப்பட்ட தேதி: 2015 ஏப்ரல் 11.   

உணவு, உடை, உறைவிடம்... இந்த மூன்றும் மனிதர்க்கு அடிப்படைத் தேவைகள். நம்மைப் போலவே, பறவைகளுக்கும் அடிப்படைத் தேவைகள் உண்டு!

பருவங்கள் மாறும்போது, உணவுப் பற்றாக்குறை ஏற்படும். அத்துடன் இருப்பதற்கும் பாதுகாப்பான ஓர் இடம் தேவை. இவற்றைத் தேடி பறவைகள் செல்லும் பயணம்தான்வலசை' (Migration).

வெயில் காலத்தில் மனிதர்கள் கோடை வாசஸ்தலங்களை நோக்கிச் செல்வதுபோல, குளிர்காலத்தில் மேற்கத்திய நாடுகளில் இருந்து அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள இந்தியா உள்ளிட்ட வெப்ப மண்டல நாடுகளுக்குப் பறவைகள் இடம்பெயர்கின்றன. தாயகத்தில் உகந்த சூழ்நிலை உருவான பிறகு திரும்பிச் செல்கின்றன. குறிப்பிட்ட காலத்தில் நடைபெறும் இந்த இடம்பெயர்தல்தான்வலசை'.

முதல் புத்தகம்

வெளிநாடுகளில் இருந்தும், இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்தும் தமிழகத்துக்கு வந்து செல்லும் வலசைப் பறவைகள் (Migratory birds) குறித்து, தமிழில் விரிவாக வெளியாகியுள்ள முதல் புத்தகம்வலசைப் பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள்'. ‘பூவுலகின் நண்பர்கள்' வெளியீடாக வந்துள்ள இந்தப் புத்தகத்தை எழுதியிருப்பவர் ஒளிப்படக்காரரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான . சண்முகானந்தம்.

பறவைகள் ஏன் வலசை செல்கின்றன, வலசை செல்லும்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்கள் முதல் பறவைகள் வலசை வரும் இடங்களில் ஏற்பட்டுவரும் சுற்றுச்சூழல் சீரழிவு, பருவநிலை மாற்றம், அவற்றால் பறவைகளின் வலசை எப்படிப் பாதிக்கப்படுகிறது என்பதுவரை பல விஷயங்களைப் புத்தகத்தில் கவனப்படுத்தியுள்ளார்


வாசக கவனம்

சங்கத் தமிழ் இலக்கியங்களில் வலசைப் பறவைகளைபுலம்பெயர் புள்', 'வம்பப் புள்' எனக் குறிப்பிட்டுள்ளது போன்ற செய்திகள், அழகிய ஒளிப்படங்கள் மூலம் வெகுஜன வாசகர்களையும் கவரும் வண்ணம் இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.

அதேநேரம் குஜராத்தைகுசராத்' என்றும், ‘டிகிரி’ என்கிற ஆங்கிலச் சொல்லைபாகை' என்றும் பல இடங்களில் தனித்தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது போன்ற புதிய துறைகளைப் பற்றி விளக்கும்போது, முழுமையும் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி எழுதுவது இவ்வாறான படைப்புகளில் இருந்து வாசகர்களைத் தள்ளி வைக்கக்கூடும்.

தொடக்கப் புள்ளி

பருவநிலை மாற்றத்தால் வலசை செல்லும் பறவைகள், உரிய காலம் வருவதற்கு முன்பே வலசைப் பயணத்தைத் தொடங்கிவிடுகின்றன. அவ்வாறு முன்பே வலசையைத் தொடங்காத பறவை இனங்கள் வேகமாக அழிந்துவருகின்றன என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

அதைவிடவும் பறவைகளுக்கு மனிதன் ஏற்படுத்தும் கெடுதல்களே அதிகம் என்பதைப் புரிந்துகொள்வதற்கு, இந்தப் புத்தகம் ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கும்.

நன்றி: தி இந்து (சில மாற்றங்களுடன்)

Monday, April 13, 2015

‘Literary works mirror societal transformation’


By N Vinoth Kumar 
Published: 29th January 2013

Daniel Selvaraj, who  won the coveted  Sahitya Akademi Award for the year 2012, for his novel Thol (Tamil for 'Leather'), says novels are a mirror reflection of society.

The latest tome is an in-depth work that portrays the life and struggles of tannery labourers of Dindigul spanning from 1930 to 1958.

Selvaraj was recently in Chennai when he was felicitated by Thamizh Perayam of SRM University. Talking to City Express, Selvaraj shares his literary innings so far and his professional life, from where he comes up with stories for his works.

Born in Thenkalam, a small village in Tirunelveli district, Selvaraj, who spent early years of youth in tea estates, has obtained law degrees and practises as a lawyer in Dindigul at present.

Having watched the struggles of contract labourers in tea estates, he has decided to record their lives in his literary works.

“That was the time when I was pursuing my undergraduate in Hindu College in Tirunelveli. There I had very excellent and well-known professors such as Tho. Mu. Si. Ragunathan, Thi. Ka. Sivasankaran and Vaanamaamalai among others. We had Tirunelveli Murpokku Ezhuthaalargal Sangam there. Their views and writings on forward thinking interested me,” he says.


His association with the progressive writers union has made him write novels based on real time scenarios.

This has resulted in novels like Malarum Sarugum, his debut novel, that spoke about the farmers lives of Tirunelveli and Thaeyneer, which presented the lives and struggles of labourers in tea estates.

“It was an era of Congress Socialist Party, when communists joined Congress, as the Communist Party was banned by British. During Nehruvian period, the trade unions’ movement began to gain momentum. Being a lawyer, I had many opportunities to work with those trade unions, mainly those of tannery workers, and was inspired to write about their lives and struggles in Thol,” he says.

In the novel, there are 117 characters that are portrayed in four chapters. All the characters sacrifice their lives with no expectations. One such character is Irudhayasamy, a person who sparks the struggle but doesn’t get the due credit after the purpose of the struggle is achieved.

“In real life too, the same character did not get any credit,” says Selvaraj to our astonishment. After a little pause he continues. “Not a single character in this novel is imaginary. All the characters are real. Since, I am a lawyer, I have an advantage that the other writers don’t have. Yes, everyday I am meeting people and everyday I am in the midst of problems. So, my novels always have real life incidents” he says.


He adds, “Nature and society are not constant. A character may be nascent in the earlier parts of a novel, but the same character matures after many experiences. The purpose of a novel is to depict the transformation of a social order.”

When asked about a few works that were always branded as Dalit writing, he explains, “Many of the writers just record the sufferings of Dalit and eventually they get branded as Dalit writing. But true Dalit writing must also include the Dalit struggle for its liberation. Social freedom cannot be enjoyed until we are having Dalit freedom. Both are intertwined.”

Selvaraj’s next novel is also based on real life anecdotes. “I am in the process of writing a novel based on the freedom struggle that first broke out in South India,” he signs off.

Courtesy: The New Indian Express

Monday, March 16, 2015

"காடுகள் இருக்கின்றன... அங்கே உயிர் இல்லை!"

ந.வினோத் குமார்

பதிப்பு தேதி: 2015 மார்ச் 7

பிரபல செய்தியாளர் பர்கா தத்தைப் பலருக்கும் தெரிந்திருக்கும். அவருடைய தங்கை பஹர் தத்தைப் பற்றி சிலருக்கே தெரியும். ஆனால், பர்காவைவிட பஹர் தத்தின் ஊடகச் செயல்பாடுகள் மிக முக்கியமானவை.

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த செய்திகள், விவாதங்களை 'பிரைம் டைம் ஷோ' ஆக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு. சி.என்.என்-ஐ.பி.என். தொலைக்காட்சியில் சுற்றுச்சூழல் செய்தியாளராக இருக்கிறார் பஹர் தத்.

மாற்றத்தின் வித்தகி

ஊடக உலகில் சுற்றுச்சூழல் குறித்த விஷயங்கள் செய்திக்கான களமாக இல்லாமல், ‘ஃபீச்சர் ஸ்டோரீஸ்' என்ற பொழுதுபோக்கு அம்சமாகப் பார்க்கும் பொதுப் பார்வை உண்டு.

இத்தகைய செய்திகளை ஆண் செய்தியாளர்களேகூட ஒதுக்கும் போக்கு பரவலாக இருந்த சூழ்நிலையில், தொலைக்காட்சி ஊடகத்தில் ‘சுற்றுச்சூழல் செய்திகளை' பரபரப்பான விஷயமாக மாற்றி, பலரின் கவனத்தை ஈர்த்த பெண் செய்தியாளர்தான் பஹர்.

அதனால் பல அரசியல்வாதிகளின் எதிர்ப்பையும் அவர் எதிர்கொள்ள நேர்ந்தது. அவர் வெளியிட்ட செய்திகளைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் சட்டங்களை மீறிய மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நீதிமன்றங்கள் தடை விதித்திருக்கின்றன.

தன் பணிகளுக்காக ‘கிரீன் ஆஸ்கர்' உட்பட பத்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ள அவர், தன் செய்தி சேகரிப்பு அனுபவங்களை ‘கிரீன் வார்ஸ்' என்ற புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் சென்னை வந்திருந்தவரிடம் உரையாடியதில் இருந்து...


எல்லா நதிகளையும் காப்போம்

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் திட்டமான கங்கையைத் தூய்மையாக்குவதில், எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் என்னுடைய கேள்வி, ஏன் கங்கையை மட்டும் தூய்மைப்படுத்த நினைக்கிறீர்கள் என்பதுதான்.

இன்று நாட்டில் உள்ள பெரும்பாலான ஆறுகள் அணை கட்டி தடுக்கப்பட்டிருக்கின்றன. எல்லா ஆறுகளுமே அளவுக்கு அதிகமாகச் சுரண்டப்பட்டிருக்கின்றன. எனவே, கங்கையோடு இதர ஆறுகளையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் நமக்குண்டு.

இன்னொரு திட்டம், நதிகளை இணைப்பது. அது சுற்றுச்சூழலுக்கு மிகுந்த கேடு விளைவிக்கும் என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ளவில்லை. ஒவ்வொரு நதிக்கும் தனித்துவமான பண்பு உண்டு. அதைச் சிதைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. நான் அந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறேன்.

சுரண்டப்படும் மக்கள்


ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு சுரங்கம் உள்ளிட்ட பல விஷயங்களிலும் சுற்றுச்சூழல் சட்டங்கள் தலைகீழாக மாற்றப்பட்டு வருகின்றன. வளர்ச்சி என்ற அரசின் மாயவலையில் அதிகம் சிக்கியிருப்பது பழங்குடிகள்தான். ஜார்க்கண்ட், ஒடிசா போன்ற மாநிலங்கள் அதிகளவு கனிம வளத்தைக் கொண்டிருப்பது உண்மைதான்.

அங்கு சுரங்கம் மூலம் மக்களுக்கு வளர்ச்சி கிடைக்கும் என்று சொன்னால், இந்நேரம் அந்த மாநிலங்கள் எல்லாம் வசதி படைத்த மாநிலங்களாக மாறியிருக்க வேண்டுமே? ஆனால் அதற்கு மாறாக, மனித மேம்பாட்டுத் தர வரிசையில், அந்த மாநிலங்கள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதை எப்படிப் புரிந்துகொள்வது?


பாமாயில் வேண்டாம்

அதேபோல, இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் பயன்பாட்டை நாம் தவிர்க்க வேண்டும். இந்தோனேசியக் காடுகளைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். உலகிலேயே மூன்றாவது மிகப் பெரிய காடுகளான இந்தோனேசியக் காடுகள் 12 கோடி ஹெக்டேர் பரப்பளவு கொண்டவை. சுமார் 90 சதவீதம் ஓரங் ஊத்தான் குரங்குகள் இந்தக் காடுகளில் வசிக்கின்றன. எஞ்சிய 10 சதவீதம் மலேசியாவின் சாபா, சரவாக் காடுகளில் உள்ளன.

பாமாயில் தேவைக்காக ஓரங் ஊத்தானின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் இந்தோனேசியக் காடுகள் முழுவதும் பரவியிருந்த ஓரங் ஊத்தான்கள், தற்போது 60 ஆயிரமே இருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 5 ஆயிரம் ஓரங் ஊத்தான்கள் அழிந்துவருகின்றன.

இதைத் தடுக்க வழி இருக்கிறது. மழைக்காடுகளில் இருந்தோ அல்லது ஓரங் ஊத்தான் வசிக்கும் காடுகளில் இருந்தோ உற்பத்தி செய்யப்படும் பாமாயிலைப் பயன்படுத்தாமல் விலக்க வேண்டும். ‘இந்தோனேசியக் காடுகளில் இருந்து தயாரிக்கப்படவில்லை’ என்று சான்று பெற்ற பாமாயில் உற்பத்தி பிரிட்டனில் வெற்றி பெற்றிருக்கிறது. அது சரியாக நடைபெறும்போது, ஏன் இந்தியாவிலும் அதை நடைமுறைப் படுத்தக் கூடாது.

நாம் பெறும் விழிப்புணர்வு, தொடர் செயல்பாடுகள் மூலம்தான் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும். அதுதான் நம் எதிர்காலத்தை உத்தர வாதப்படுத்தும் என்கிறார். 

நிஜம்தானே!

நன்றி: தி இந்து (தமிழ்)