Monday, January 25, 2016

He commented it as a 'Swadeshi' bird!


N.Vinoth Kumar

We can call him as a ‘jungle folk’ in its true sense. Its not just because he wrote a book on birds, but he made an immense contribution to the Indian ornithology as a whole. He traversed day and night in the forests of India. One who reads his field notes, will think that whether the author turned himself as a bird.

When Douglas Dewar joined Indian Civil Service in 1898, he wouldn’t thought of exploring the nature in India. British civil servant by profession, he also pursued ornithology as an hobby. But once, when he came to India, he was attracted by India’s biodiversity, which resulted in writing four books on avian richness of India by him.

Born in London on 1875, Dewar wrote around 14 books, of many related to nature, during his life time. One of the book under review is ‘Jungle Folk: Indian Natural History Sketches’, which was first published on 1912. The book was recently reprinted by Aleph publications, New Delhi.

Having said that, ‘It is not of the bigger jungle folk that I write – of lions, tigers…’ in his crisp preface, his subjects of writing were about birds. The book has 44 chapters out of which 42 speaks about birds and 2 about cobra and squirrels.

His way of giving adjectives to birds like ‘a Shakespeare among birds’ (Corvus splendens), ‘clown of the forest’ (Hornbills), etc., makes a reader to dwell up on more on the subject - birds. Through out the book, he gives sumptuous information about birds, which were still now unknown to many. For example, he writes, ‘The robin, for example, has been known to devour two and a half times its weight in earthworms in a single day’. He writes that on a note of showing sympathy to ‘birds of prey’ which are seen as villains. Preceding to the above example, he writes, ‘We should bear in mind that the average insectivorous bird kills in the course of his life a vastly greater number of living things than does the eagle’. These kind of information leave a reader who is a budding ornithologists in awe.

 
It is interesting to know that the Romans of ancient times, used to hold a festival in honour of the goose, which is seen as ‘garrulous fool’. When he writes about Night Heron, he says that ‘the bird only sleeps when it has nothing better to do. It looks upon sleep as a luxury, not a necessity’. While explaining Indian Fly-Catchers he says that, ‘There exist in the Indian Empire no fewer than fifty-one species of fly-catcher. This fact speaks volumes for the wealth of both the bird and the insect population of India’. He also underlines that while Europeans likes to shoot a bird at flying, Indian shikaris were shoot a bird sitting. A reader cannot get these kinds of details even in encyclopaedias.

While portraying the birds, he also deconstructs the ideas which were put forth by ornithologists of past. For example, criticising French historian Jules Michelet as ‘wrong-headed naturalist’ who wrote that ‘birds dread the night’, Dewar says, ‘Greater nonsense than this was never penned outside a political pamphlet’.

Since he worked at then Madras for most part of his tenure, the city found places in some of his notes. Pied-wagtail (Mount Road Bridge), Lesser Cormorant (Redhills Tank), Indian Pitta (at least one favoured compound in Madras), Indian Redstart, Night Heron are the birds he lists out. When referring to pitas he says that, ‘I know of no better testimonial to the excellence of the climate of that city’. When describes about Redstart he underlines, ‘the cuckoo is welcomed in England as the harbinger of the sweet spring, so in Northern India is the redstart looked for as the herald of the glorious cold weather’. It is possible, after Independence that our leaders could have taken a hint from Dewar’s writing, who commented Common Peafowl as a ‘Swadeshi’ bird.

In the very article titled ‘A Swadeshi Bird’ he also makes a reference to Nilgai. In which he says that, ‘Nilgai, even, may not be shot, because the Pundits, not being zoological experts, labour under the delusion that these ungainly antelope are kine’. While reading these lines, it is unable to avert the truth that the Centre in the end of 2015, gave permission to Bihar to slaughter Nilgais, which is seen as a vermin there. Pity!

Another important good thing a reader can find in this book is, Dewar points out books on ornithology here and there. Ornithological and Other Oddities, How to Know the Indian Waders, and Garden and Aviary Birds of India all three by Frank Finn, Bird Watching by Edmund Selous, Handbook on the Management of Animals in Captivity by Babu R.P.Sanyal, Tower Menagerie by Bennet, Bombay Ducks by Captain Fayrer, Birds and Man by W.H.Hudson, Some Indian Friends and Acquaintances by Col.Cunningham are the books he noted in his notes.

In certain places, he also sheds some light on the bird research areas, which should be carried over by the future ornithologists. At one point of time he says, ‘The connection between climate and the distribution of birds is a fascinating subject about which very little is known’. Having said this, he implies that there is a secret lies between the climatic conditions and bird migration.

Throughout the book the author names many ornithologists, historians, naturalist like Phil Robinson, Warde Fowler, John Burroughs, Lockwood Kipling, Charles Kingsley, Dr. Blanford and many others. He could have been given some terse introduction about them before referring their ideas and opinions. Albeit, a reader who is interested in birds, certainly can ‘google’ it and find information about those personalities, it will be a difficult to an ordinary reader to follow ‘who is who’.

His flow of writing resembles to a flapping of a bird and hence, it is a ‘flying’ read! At one place he says, ‘Summoe opes, inopia cupiditatum’. But that is not true with bird-watching!

Friday, January 8, 2016

பாரிஸுக்கு ஐ.எஸ். பொறுப்பு... ஐ.எஸ்.ஸுக்கு..?

ந.வினோத் குமார்
 
பதிப்புத் தேதி: 20 நவம்பர், 2015

ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது பாரிஸ் நகரம். முதல் முறை சார்லி ஹெப்தோ கேலிச் சித்திரம் தொடர்பாக. சமீபத்தில் சாந்த் தெனி பகுதியில் நடந்திருக்கும் தாக்குதல் இரண்டாவது முறை. முந்தைய தாக்குதலுக்கு ஐ.எஸ்.தான் காரணம் என்று அரசல் புரசலாகப் பேசப்பட, இந்த முறை நடந்த தாக்குதலுக்கு 'நாங்கள்தான் செய்தோம்' என்று வெளிப்படையாகப் பொறுப்பேற்றுள்ளது ஐ.எஸ்.!

இன்றைய உலகின் மிக முக்கியப் பிரச்சினைகளுள் ஒன்றாக ஐ.எஸ். அமைப்பின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன. ஒரு பக்கம் சிரியா மற்றும் இராக்கில் உள்நாட்டிலேயே பல்வேறு இன, மதக் குழுக்களிடையே கலவரம் ஏற்பட, இன்னொரு பக்கம் தீவிரவாதத்தை ஒடுக்குகிறேன் என்ற பெயரில் அந்நாடுகளின் அரசுகள் சொந்த குடிமக்களையே துன்புறுத்த, இந்தப் பக்கம் 'ஜிகாதிகள்' என்று ஊடகங்கள் அலற, மேற்சொன்ன காரணங்களால் மேற்கத்திய நாடுகள் பலவும் இன்று 'இஸ்லாமோஃபோயியா'வுக்கு ஆளாகி வருகின்றன.

அத்தனைக்கும் மூலக்காரணமாக ஐ.எஸ்.அமைப்புதான் சுட்டிக் காட்டப்படுகிறது. 'ஆனால் ஐ.எஸ். அமைப்பை அப்படி மேலோட்டமாகப் புரிந்துகொள்ளக் கூடாது. இந்தளவுக்கு ஐ.எஸ். வளர்ந்திருக்கிறதென்றால், அதற்கு மேற்கத்திய நாடுகளே காரணம்' என்று வாதிடுகிறார் நிக்கோலா ஹெனின், தனது 'ஜிகாத் அகாடெமி' புத்தகத்தில்.

ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள 'லு புவான்', 'ஆர்த் தெலிவிஸ்யோன்' மற்றும் 'ரேடியோ ஃபிரான்ஸ்' உள்ளிட்ட ஊடகங்களுக்கு சுதந்திரப் பத்திரிகையாளராகப் பணியாற்றுபவர் நிக்கோலா ஹெனின். 2013ம் ஆண்டு சிரியாவில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது, ஐ.எஸ். அமைப்பினரால் கடத்தப்பட்டு, 2014ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.



இந்த ஆண்டு மே மாதம் 'ஜிகாத் அகாடெமி' புத்தகம் வெளியானது. பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை மார்டின் மாகின்சன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இந்தப் படைப்புக்கு 'ப்ரி து லீவ்ர் ஜியோபொலிடிக்' விருது கிடைத்துள்ளது. 'தான் கடத்தப்பட்ட அனுபவங்களைத்தான் புத்தகமாக எழுதியிருப்பார்' என்று நினைத்து புத்தகம் வாங்கியவர்களுக்கு ஓர் ஆச்சரியம். அந்த அனுபவங்கள் குறித்து எதுவுமே இல்லை.

"என் அனுபவங்களை எழுதுவதை விட, ஐ.எஸ். அமைப்பை நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறேன்" என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
மிகச் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் 2003ம் ஆண்டு அமெரிக்கா இராக்கிற்குள் நுழைந்த அன்றுதான் ஐ.எஸ். அமைப்பு பிறந்தது. அதற்கு முன்பு அங்கு ஜிகாதி தீவிரவாதம் இருக்கவில்லை. அமெரிக்காவின் நுழைவுக்குப் பிறகு அங்கு ஜிகாதிகளின் எண்ணிக்கை அதிகமானது. 'ஜிகாதி ஹைவே' என்று அமெரிக்கா தானாக‌ ஒரு வரைபடத்தை வடிவமைத்தது. என்ன ஆச்சர்யம்... அதே இடங்களில்தான் இன்று ஐ.எஸ். ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்கிறார் ஹெனின்.

சதாம் உசேனை கைது செய்தவுடன் தனது வேலை முடிந்துவிட்டது என்று வெளியேறியது அமெரிக்கா. வெளியுலகத்துக்கும் அப்படித்தான். ஆனால் இராக்கிற்கு அப்படியல்ல. சன்னி, ஷியா பிரிவினருக்கிடையே மோதல்கள் அதிகளவில் ஏற்பட ஆரம்பித்தன. இது சிரியாவுக்கு பரவியது. அங்கு குர்துக்கள், கிறிஸ்துவர்கள், ஷியா, சன்னி, யூதர்கள் என ஒவ்வொரு இனக் குழுவும், மதக் குழுவும் ஒன்றுக்கொன்று மோதலில் ஈடுபட்டன. இறுதியில் சன்னி பிரிவினரின் கையே ஓங்கி, அது ஐ.எஸ். அமைப்பாக உருவெடுக்கிறது.
சிரியாவில் 'அதுக்கும் மேல' என்கிற பாணியில் தீவிரவாதத்தை ஒடுக்குகிறேன் என்ற பெயரில் அரசே மக்களைக் கொன்றது. ஐ.எஸ். அமைப்பு செய்த கொலைகளின் எண்ணிக்கையை விடவும், சிரியா அரசு செய்த கொலைகளின் எண்ணிக்கை அதிகம் என்று புள்ளிவிவரம் தருகிறார் ஹெனின். 'போர் என்பது அங்கு கொள்ளையடிப்பதற்கான ஒரு வழி'யாகவே பார்க்கப்பட்டது என்று அவர் பதிவு செய்கிறார்.

தீவிரவாதிகள், அரசுகள் ஆகியோரிடமிருந்து மக்களைக் காப்பாற்றும் கிளர்ச்சியாளர்கள் என்று அறிவித்துக்கொண்ட அமைப்புகளும் மக்களை கொலை செய்து வந்தன. இதன் காரணமாக சிரியா மக்களுக்கு எந்த அமைப்புகள் மீதும் நம்பிக்கை ஏற்படவில்லை. அதனால்தான் 'கொபேன்' போர் நடைபெற்றபோது மேற்கத்திய நாடுகள் 'தீமைக்கும் நன்மைக்கும் இடையே நடைபெறும் போர்' என்று கூற, சிரியா மக்களோ 'இது இரண்டு தீவிரவாத குழுக்களுக்கு இடையே நிகழும் மோதல்' என்று வெறுமனே கடந்து போனார்கள்.

'மேற்கத்திய தன்மை கொண்டவன்/ள்' என்ற இழிபேச்சுக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதில் சிரியா கிளர்ச்சியாளர்கள் தெளிவாக உள்ளனர். காரணம் மேற்கத்திய நாடுகள் மீதுள்ள கோபத்தால் அல்ல. மாறாக, மக்களுக்குத் தங்களிடம் உள்ள நம்பிக்கையை இழந்துவிடுவோமோ என்கிற பயம்தான்.

இந்தப் போர்களில் வெற்றி கொள்வதன் மூலம் 'கிலாஃபத்' உலகில் தோன்றிவிட்டது என்று அறிவிக்கும் முயற்சியில் ஐ.எஸ். மிகத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. அந்தப் பணிகளில் ஒன்று இந்த அமைப்புக்கு இளைஞர்களை ஈர்ப்பது. ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக இளைஞர்களை ஈர்க்க ஆரம்பித்துள்ளது ஐ.எஸ். இந்தியாவில் இருந்து மட்டும் இப்போது வரை சுமார் 50 இளைஞர்கள் ஐ.எஸ். அமைப்பில் இணைந்துள்ளதாக வரும் தகவல் நம்மை அதிர வைக்கிறது.

ஆனால் இந்த அமைப்பில் சேரும் இளைஞர்கள் யார் என்று பார்த்தால், அவர்களில் பெரும்பாலானோருக்கு சரியான குடும்பம் அமையாதது, உறவுகளால் வாழ்வில் ஏற்பட்ட கசப்பு, தான் ஒரு தவறான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்தான் என்கிறார் ஹெனின்.

டைகிரிஸ் மற்றும் யூஃப்ரடிஸ் பள்ளத்தாக்குகளில்தான் எழுத்தும், இலக்கியமும், கணிதமும், சட்டமும், வணிகமும் தோன்றின. மருத்துவம், தத்துவம் ஆகிய துறைகளுக்கான அடித்தளமும் இங்குதான் அமைக்கப்பட்டன. இங்குதான் அரசும், அரசாங்கமும் தோன்றின. இராக் மற்றும் சிரியா நாடுகள் மனித குல நாகரிகத்தின் தொட்டில்கள்.
"அத்தகைய பெருமைகளுக்குரிய நாடுகளில்தான் இன்று தீவிரவாதம் தலைதூக்கியுள்ளது. இனியும் வேடிக்கை பார்க்காமல் மேற்கத்திய நாடுகள் தலையிட்டு, தீர்வுகளைக் கண்டறி வேண்டும். நமது வேர்களும் அங்கு நடைபெறும் போர்களில் அழிந்துபோகின்றன. அந்த நாடுகள் அழிந்தால் நாமும் அழிந்துபோவோம்" என்கிற ஹெனின் வார்த்தையில் உண்மையிருக்கிறது. 

நன்றி: தி இந்து (தமிழ்)

Tuesday, December 1, 2015

நீங்கள் அமெரிக்கர் ஆக விரும்புகிறீர்களா?

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 27 நவம்பர் 2015.

இன்று ஒரு சராசரி இந்திய இளைஞனின் கனவு என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அடுத்த பிரதமராக ஆவது? இன்னொரு சூப்பர் ஸ்டார் ஆவது? குறைந்தபட்சம் அர்னாப் கோஸ்வாமி ஆவது? ம்ஹும்... இதில் எதுவுமில்லை. அமெரிக்கன் ஆவது! 

இன்று அமெரிக்காவில் வசிக்க வேண்டும். இதற்காகத்தான் இன்று ஒரு தலைமுறை இளைய சமுதாயம் கஷ்டப்பட்டுப் படிக்கிறது. மாநில அளவில் மதிப்பெண்கள் பெறத் துடிக்கிறது. தேசிய அளவிலான பொறியியல் நுழைவுத் தேர்வுகளில் முதல் பத்து தரவரிசைகளுள் வர அயராது ஓடுகிறது, பந்தயக் குதிரைகளைப் போல! 

கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி, சிலிக்கான் வேலியில் ஒரு வேலை கிடைத்துவிட்டால் போதும். ‘அமெரிக்கன் ட்ரீம்' வாழ்க்கைக்கான என்ட்ரி கிடைத்துவிட்ட திருப்தியை உணர ஆரம்பித்துவிடுகிறார்கள். 

ஆனால் அமெரிக்க வாழ்வு அவ்வளவு அழகானதா? கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ‘டேட்டா'வைக் கொஞ்சம் பாருங்கள். 

# புவி வெப்பமயமாதலுக்குக் காரணமான ‘பசுமை இல்ல வாயுக்களை' அதிக‌ அளவில் வெளியிட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இதனால் அதற்கு வரலாற்றுபூர்வமான சுற்றுச்சூழல் கடன் அதிகமாக உள்ளது. 

# அமெரிக்காவில் மின்சாரத் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் நிலக்கரியின் அளவு இந்தியா பயன்படுத்தும் அளவைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமானது. 

# மாற்று எரிபொருட்களில் ஒன்றான இயற்கை எரிவாயுவைக் கடந்த ஆண்டு அமெரிக்கா பயன்படுத்திய அளவு 22 சதவீதம். இது உலகம் முழுக்கப் பயன்படுத்திய இயற்கை எரிவாயுவின் அளவுக்குச் சமமானது.

# இந்தியாவில் தனிநபர் ஒருவர் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவை விட 17 மடங்கு அதிகமாக‌ அமெரிக்கர் ஒருவர் பயன்படுத்துகிறார்.

# இந்தியாவில் ஆயிரம் பேருக்கு 18 பேர் கார்கள் வைத்திருந்தால், அமெரிக்காவில் அதே ஆயிரம் பேருக்கு 786 பேர் கார்கள் வைத்துள்ளனர். அதாவது, இந்தியாவில் 15 சதவீதம் பேர் கார்களைப் பயன்படுத்தினால், அமெரிக்காவில் 85 சதவீதம் பேர் கார்களைப் பயன்படுத்துகின்றனர்.

இந்தத் தரவுகளின் பின்னுள்ள முக்கிய அம்சம், உலகின் மிகத் தீவிரமான‌ சுற்றுச்சூழல் பிரச்சினையான பருவநிலை மாற்றத்துக்கு அமெரிக்காவின் பங்கு மிக அதிகமானது. முதன்மையானது!

அமெரிக்கப் புரட்சியின்போது அமெரிக்காவுக்கும் பிரான்ஸுக்கும் இடையே நிலவிய நட்புறவை வெளிக்காட்டும் விதமாக, பிரான்ஸ் தேசம் அமெரிக்காவுக்கு சுதந்திர தேவி சிலையை நினைவுப் பரிசாக வழங்கும் அளவுக்கு இருநாடுகளுக்குமிடையே ஆழமான நட்புறவு உண்டு.


விளக்கின் அடியில் இருள் கவிழ்ந்திருக்கும் எனும் வார்த்தைகளுக்கு ஏற்ப, இன்று சுதந்திர தேவி சிலைக்குக் கீழும் இருள் சூழ்ந்திருக்கிறது. அந்த இருள் விலகுவதும் நீடிப்பதும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கையில் உள்ளது.

ஆம்! வரும் 30-ம் தேதி முதல் டிசம்பர் 11-ம் தேதி முதல் பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரிஸில் 21-வது பருவநிலை மாற்ற உலக மாநாடு நடைபெறுகிறது. அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்ற முதல் கருப்பர் இனத் தலைவர் ஒபாமா. தற்போது இரண்டாவது முறையாக அந்தப் பதவியில் நீடிக்கிறார். அவர் மூன்றாவது முறையாகவும் அதிபராக வருவதைத் தடுக்கும் விதத்தில் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் 22-வது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், நடக்க இருக்கும் பருவநிலை மாற்ற மாநாட்டில், ஒபாமா மிக முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ‘அமெரிக்க மக்களின் ‘லைஃப் ஸ்டைலு'டன் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள வேண்டும்' என்பதுதான் அது! இந்த முடிவை எடுக்கும்பட்சத்தில், அமெரிக்காவில் ஒபாமாவுக்குக் கெட்ட பெயர் கிடைக்கும். ஆனால் உலக அளவில் அவருக்கு வரலாற்றுச் சிறப்பு கிடைக்கும். எதை அவர் தேர்வு செய்யப்போகிறார் என்பது இன்றைய தினத்தில் ‘மில்லியன் டாலர்' கேள்வி! 

"நடக்கப்போகும் இந்த மாநாட்டில் பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க உலகம் அனைத்துக்கும் பொதுவான ஒப்பந்தம் ஒன்றை உருவாக்குவோம். இந்த முடிவை யாருக்காகவும் நாங்கள் மாற்றிக்கொள்ள மாட்டோம்" என்று டெல்லியில் சமீபத்தில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் பிரான்சுவா ரீஷியே கூறியுள்ளார்.

1995-ம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகளின் சார்பில் இந்த பருவநிலை மாற்ற உலக மாநாடு நடைபெற்றுவருகிறது. இத்தனை ஆண்டுகளாக பருவநிலை மாற்றம் பிரச்சினையில், தனது பங்கைத் தட்டிக் கழித்து வந்திருக்கிறது அமெரிக்கா. மிகச் சமீபத்தில்தான் ‘பருவநிலை மாற்றம் உண்மை. இதனைச் சமாளிப்பதற்கு எங்களால் ஆன முயற்சிகளை மேற்கொள்கிறோம்' என்று கூறி தனது திட்டங்களைச் சமர்ப்பித்துள்ளது.

இந்த வரலாற்றுத் தருணத்தில், அமெரிக்காவின் திட்டங்களை முதன் முறையாக இந்தியாவைச் சார்ந்த ‘அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்' (சி.எஸ்.இ) ஆராய்ந்துள்ளது. தனது ஆய்வை ‘கேபிடன் அமெரிக்கா' (Capitan America. கவனிக்க... Captain அல்ல!) என்ற புத்தகமாக வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் திட்டங்களில் உள்ள குறைகள் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ‘அமெரிக்காவின் திட்டங்களை விமர்சனத்துக்கு உள்ளாக்கிய தெற்காசியாவிலிருந்து வந்திருக்கும் முதல் அறிக்கை இது' என்று போற்றப்படுகிறது இந்தப் புத்தகம்.


நமது வளி மண்டலத்தை வட்ட வடிவிலான ஒரு ‘கேக்' ஆக கற்பனை செய்துகொள்ளுங்கள். அதில் சுமார் 60 சதவீதம் ஏற்கெனவே தின்று முடித்தாகிவிட்டது. அதாவது, வளி மண்டலத்தில் சுமார் 60 சதவீத இடத்தில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் வெளியிட்ட பசுமை இல்ல வாயுக்கள் நிரம்பியிருக்கின்றன. கார்பன் டை ஆக்ஸைடு போன்ற வாயுக்களை நாம் பசுமை இல்ல வாயுக்கள் என்போம். இவற்றின் ஆயுட் காலம் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலானது .

கடந்த 80 ஆண்டுகளில் அமெரிக்கா வெளியிட்ட பசுமை இல்ல வாயுக்கள்தான் அதிக அளவில் நிரம்பியிருக்கின்றன. இதன் காரணமாகத்தான் சூழலை மாசுபடுத்திய வரலாற்றுக் கடன் அமெரிக்காவுக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்கா அதை ஏற்க மறுக்கிறது. மாறாக, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளைப் பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்கச் சொல்கிறது. அதாவது, நாம் நமது வளர்ச்சிப் பணிகளை எல்லாம் நிறுத்திக்கொண்டு ஏழையாகவே இருக்க வேண்டுமாம். எப்படி இருக்கிறது கதை?

இப்போது மீண்டும் ‘கேக்'குக்கு வருவோம். மீதமிருக்கும் 40 சதவீத இடத்தில் எந்தெந்த நாடுகள் எவ்வளவு பசுமை இல்ல வாயுக்களைக் கொண்டு நிரப்பலாம், யாருக்கு எவ்வளவு இடம் கிடைக்கும் என்பதுதான் கேள்வி.

இந்த இடத்திலும் அமெரிக்கா கை வைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் ‘மின்சாரத்தைச் சிக்கனமாக உபயோகிக்க வேண்டும், ஒருவருக்கு இரண்டு கார்கள் தேவையில்லை உள்ளிட்ட முழக்கங்களோடு அமெரிக்கர்கள் தங்கள் பணக்காரத்தனமான வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்' என்று அமெரிக்காவைத் தவிர மற்ற நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்தப் புத்தகத்தை எழுதியவர்களில் ஒருவரும், சி.எஸ்.இ.யின் இணை இயக்குநருமான சந்திரா பூஷண், "பசுமை இல்ல வாயுக்களை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது அமெரிக்கா. அதற்கு முக்கியக் காரணங்களுள் ஒன்று அது படிம எரிபொருளான நிலக்கரியை அதிக அளவில் பயன்படுத்துகிறது. தற்போது, நிலக்கரி பயன்பாட்டைக் குறைத்துவிட்டு, இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்துகிறோம் என்கிறது அமெரிக்கா. அதற்காக நாம் அதைப் பாராட்டிவிடக் கூடாது. மாசுபாட்டைக் குறைக்க வேண்டும் என்ற நல்ல காரணத்தால் அது இயற்கை வாயுவைப் பயன்படுத்தவில்லை. விலை மிகவும் குறைவு, அதனால்தான்.

அங்கு பேருந்து உள்ளிட்ட பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவதைப் பெரும் பாவமாகக் கருதுகின்றனர் மக்கள். அங்கு வீடுகள் ஒவ்வொன்றும் பெருத்துவருகின்றன. 1980ம் ஆண்டில் 1,800 சதுர அடியாக இருந்த ஒரு வீடு 2002-ம் ஆண்டில் 2,400 சதுர அடியாகப் பெருத்திருக்கிறது. இதற்குக் காரணம் அங்கு குடும்ப அமைப்பின் அளவும் வளர்கிறது என்று நினைத்தால் நம்மைப் போல முட்டாள் வேறு யாருமில்லை. தான் சூழலை மாசுபடுத்துகிறோம் என்ற நினைவே இல்லாமல் மக்களை வழிநடத்திச் செல்லும் தலைவன் எங்களைப் பொறுத்தவரை ஒரு பயனற்ற தலைவன். அதனால்தான் இந்தப் புத்தகத்துக்கு ‘கேபிடன் அமெரிக்கா' என்று பெயர் வைத்தோம்" என்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடவுள்ள எந்த வேட்பாளரும் 
இதனை முன் வைத்து அமெரிக்க மக்களிடம் வாக்கு கேட்க மாட்டார் என்பதே நிதர்சனம் என்ற நிலையில், அதிபர் பொறுப்பிலிருந்து விடைபெறும் ஒபாமாவேனும் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்!

இந்தப் புத்தகத்தை எழுதிய இன்னொரு எழுத்தாளரும், சி.எஸ்.இ.யின் இயக்குநருமான சுனிதா நரேன் கூறும்போது, "இது 'லாபி' செய்யும் புத்தகமல்ல. இது முழுக்க முழுக்க உண்மைகளால் நிரம்பிய புத்தகம். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள தரவுகள் பெரும்பாலும், அமெரிக்க அரசுத் துறைகளிலிருந்தே எடுக்கப்பட்டவை. சமீபத்தில் வெளியான இந்தப் புத்தகத்தை நாங்கள் பல்வேறு மாநாடுகளில் முன்வைத்தபோது யாருமே இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. யாருமே இதைப் பொய் என்று கூறவில்லை. அமெரிக்கர்கள் உட்பட! உண்மையில் அவர்கள் இது பற்றி விவாதிக்க விரும்புவதில்லை என்பதுதான் நடைமுறை யதார்த்தம்.

வரி விதிப்பு, கட்டுப்பாடு மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலம் ஒரு சமூகத்தின் நடத்தையை மாற்ற முடியும். பொது இடத்தில் துப்புவது என்பது எப்படி ஒரு கெட்ட பழக்கமோ, அப்படியே ஒருவர் இரண்டு கார்கள் வைத்திருப்பதும் என்ற சிந்தனையை அமெரிக்க மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். அந்த மாற்றம் நிகழ வேண்டும். அது காலத்தின் கட்டாயம்!" என்றார்.

இப்போது சொல்லுங்கள், நீங்கள் அமெரிக்கர் ஆக விரும்புகிறீர்களா? 

நன்றி: தி இந்து (தமிழ்)

Sunday, November 8, 2015

மூலதனம் @ 21ம் நூற்றாண்டு!

ந.வினோத் குமார்

'சமூகப் பாகுபாடுகள் என்பது பொது பயன்பாட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும்'!

மூலதனம் மற்றும் முதலாளித்துவம் குறித்த ஒரு புத்தகத்தை, பிரஞ்சுப் புரட்சியின் அடிப்படையான‌ 'மனிதர்கள் மற்றும் குடிமக்களின் உரிமைகள் சாற்றுரை'யின் வரிகளைக் கொண்டு தொடங்குவது ஓர் அழகிய முரண்.

'கேபிட்டல் இன் தி ட்வென்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரி' (Capital in the Twenty- First Century) என்ற தலைப்பில் அமைந்த அந்தப் புத்தகம் முழுக்க முழுக்கப் பேசும் விஷயம் அரசியல் பொருளாதாரம். எனவே, அதன் ஆசிரியர் தாமஸ் பிக்கெட்டி, மேற்கண்ட வரிகளைப் பயன்படுத்தியிருக்கலாம்.

'ராக்ஸ்டார் எகனாமிஸ்ட்'! இப்படித்தான் அவரை அடையாளப்படுத்துகிறது லண்டனில் இருந்து வெளிவரும் பத்திரிகையான 'தி கார்டியன்'.

ஓரளவு அது உண்மையும் கூட! இத்தனை ஆண்டுகளாக 'தாமஸ் பிக்கெட்டி யார்' என்று கேட்டிருந்தால் அவரது பக்கத்து வீட்டாருக்குக் கூடத் தெரிந்திருக்காது. ஆனால் இந்த ஒரே புத்தகத்தின் மூலம் அவர் உலக அளவில் பிரபலமாகிவிட்டார். அப்படி என்னதான் இருக்கிறது அந்தப் புத்தகத்தில்?

 
ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு மூலதனம் என்பது மிகவும் அவசியம். அந்த மூலதனத்தில் இருந்து கிடைக்கும் லாபத்தை அதன் உரிமையாளருக்கும், லாபம் கிடைக்க உழைத்த பாட்டாளிகளுக்கும் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதில் ஏற்படுகிறது 'வருவாய் ஏற்றத்தாழ்வு'. இது சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் மூலாதாரமாக இருக்கிறது.

பாட்டாளிகளுக்கு குறைவாக வழங்கி, அதிகளவு பங்கை மூலதனத்தின் உரிமையாளர் எடுத்துக்கொள்கிறபோது அவரிடம் செல்வம் மேலும் மேலும் கூடிக்கொண்டே போகிறது. இவ்வாறு பல முதலாளிகளின் மூலதன வளர்ச்சி, ஒரு கட்டத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் அதிகமாகும்போது, பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறுகிறார்கள். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிறார்கள்.

முதலாளிகளிடம் சேரும் இந்த செல்வத்தைக் கட்டுப்படுத்த இருபதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட மாபெரும் கருவிதான் வரி என்று சொல்லும் பிக்கெட்டி, காலம் செல்லச் செல்ல அந்த வரி ஒவ்வொரு நாட்டிலும் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது, அதன் மூலம் தங்களின் செல்வத்தைப் பதுக்க எப்படி சில நாடுகள் அடையாளம் காணப்பட்டன, தனியாரிடம் வளரும் செல்வத்தைக் கட்டுப்படுத்த முடியுமா, 21ம் நூற்றாண்டில் மூலதனத்தின் பங்களிப்பு எப்படி இருக்கும் என்று பல கேள்விகளை எழுப்பி அதற்கு விடைகாண முயற்சிக்கிறார்.

பாரிஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்லூரியில் பொருளாதார பேராசிரியராகப் பணியாற்றும் பிக்கெட்டியின், சுமார் 15 ஆண்டுகால ஆய்வின் விளைவாக இந்தப் புத்தகம் தோன்றியிருக்கிறது.

பொதுவாகவே, பொருளாதாரம் தொடர்பான புத்தகங்கள் என்றால் வறட்சியாக இருக்கும் என்பது பலரின் எண்ணம். ஆனால் இந்தப் புத்தகம் ஒரு விதிவிலக்கு! காரணம், பொருளாதாரத்தில் 'பணம்' என்பதன் பங்கு குறித்து ஜேன் ஆஸ்டன், ஹோனர் து பால்சாக் போன்ற இலக்கியவாதிகளின் படைப்புகளில் 'பணம்' என்ற விஷயம் எவ்வாறு சித்திரிக்கப்பட்டது என்பதை விலாவரியாகச் சொல்கிறார்.

பிக்கெட்டிக்கு இத்தகைய இலக்கிய வாசிப்பு இருந்ததாலோ என்னவோ, மிகக் கடினமான விஷயங்களைக் கூட சிறுகதை ஒன்றை சொல்லிச் செல்வது போல மிக லாவகமாகப் புரிய வைத்துவிடுகிறார்.

இதன் காரணமாகத்தான் இந்தப் புத்தகத்தை விமர்சனம் செய்த 'தி கார்டியன்' பத்திரிகை, 'இந்தப் புத்தகம் 'பிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே' புத்தகத்தை விட அதிகமாக விற்பனையாகிறது' என்று சுவாரஸ்யமாகச் சொல்கிறது.

அதே நேரத்தில், அளவில் மிகப்பெரிய புத்தகங்களை நகைச்சுவையாகக் குறிப்பிட ஆங்கிலத்தில் 'டோம்'(tome) என்ற ஒரு வார்த்தை உண்டு. அதைக் கொண்டுதான் இந்தப் புத்தகத்தை 'கார்டியன்' மதிப்பீடு செய்கிறது. இது உண்மை என்றாலும் கூட (இந்தப் புத்தகம் சுமார் 700 பக்கங்களைக் கொண்டது) பிக்கெட்டி ஒரு பிரெஞ்சுக்காரர் என்பதால் அந்தப் பத்திரிகை அவ்வாறு விமர்சனம் செய்திருக்கலாம். பிரான்ஸ் நாட்டில் ஒரு பகுதியினர் தவளைக் கறி சாப்பிடுபவர்கள் என்பதால் ஒட்டுமொத்தமாகவே பிரெஞ்சுக்காரர்கள் என்றால் ஆங்கிலேயர்களுக்கு சற்று இளக்காரம்தான்!

கடந்த ஆண்டு வெளியான இந்தப் புத்தகம் பெரிய அளவில் பொருளாதார நிபுணர்கள் மத்தியில் பேசப்படுகிறது. மேலும், ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், ராபர்ட் சோலோ, பால் க்ருக்மோன் போன்ற பொருளாதார அறிஞர்களின் வரிசையிலும் வைக்கப்படுகிறார். காரணம், தாமஸ் பிக்கெட்டியும் முன்னவர்களைப் போலவே 'ஏற்றத்தாழ்வுகள்' குறித்து ஆய்வு செய்துள்ளார்.
 
இதற்காக அவர் 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளின் 20 நாடுகளின் நிலம், வாடகை பயன்பாடுகள், வரி விதிப்பு முறைகள், பொருளாதார வளர்ச்சி ஆய்வுகள் உள்ளிட்ட விஷயங்களைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்துள்ளார். இவ்வளவு பெரிய ஆய்வுக்காக இன்னும் சில ஆண்டுகளில் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த இடத்தில் தனது சாதனைகளுக்காக வழங்கப்பட இருந்த பிரான்ஸ் அரசின் உயரிய விருதான 'லிஜியன் ஆஃப் ஹானர்' விருதை மறுத்திருக்கிறார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அதற்கு அவர் சொன்ன காரணம், 'யார் போற்றுதலுக்கு உரியவர் என்பதை அரசு முடிவு செய்யக் கூடாது!' என்பதுதான்.

பால்சாக்கின் 'லு பெர் கோரியோட்' நாவலில் வாட்ரின் எனும் கதாபாத்திரம் சட்டம் படிக்கும் மாணவனான ரஸ்டிக்னாக் என்பவனிடம் 'முன்னோர் சேர்த்து வைத்த சொத்துகள் கொண்டு வாழும் சுகமான வாழ்க்கையை விட உன் உழைப்பால் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு என்னவகையான வாழ்க்கையை வாழ முடியும் என்று நீ நினைக்கிறாய்?' என்று கேள்வி எழுப்பும்.

அந்தக் கேள்விக்கு 'வருவாய் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றை கல்வி அறிவு பெறுவதால் மட்டுமே சமாளிக்க முடியும்' என்று பதில் சொல்லும் பிக்கெட்டி, புத்தகத்தின் ஓரிடத்தில் இப்படிச் சொல்கிறார்: 'மூலதனம் ஒருபோதும் அமைதியாக இருக்காது!'.

அதோடு இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளலாம்... முதலாளித்துவமும்!


Saturday, October 10, 2015

But why Janani…?


N.Vinoth Kumar

Short stories are not mere short stories. It is a slice of life. It is a granular look at our everyday life. Intricately weaved but yet extricate to observe what makes one’s life meaningful or to make meaningful the life itself.

Tamil literature has a very good tradition of short stories. While comparing world literature with Tamil literature, it can be said that, the world literature has achieved many wonders through novels. But no world literature will stand near Tamil literature when it comes to short stories.

The world literature has not even achieved a quarter what Tamil literature has achieved in short stories. All the credit goes to Pudhumaippithan, who has been considered as ‘Father of Tamil Short Story Tradition’.

Lalgudi Saptarishi Ramanujam, popularly known as La.Sa.Ra., has earned his own place after Pudhumaippithan, through his short stories. He had the power to control the words, to play with the words and to turn the words into embers. He had a sleight of hands in framing sentences and hence his stories are like a flowing river, which makes a reader wholly engaged.

He has written more than 200 short stories. Many of his stories were published as collections under the titles such as ‘Janani’, ‘Ganga’ and ‘Dhwani’.

I have read one of his short story collections ‘Janani’ which has 10 short stories. The reason I chose this collection is because, somewhere someone has said like this: when Jayakanthan in his initial days as a writer, went to meet a literary icon of those days, (it may be Ka.Na.Su or T. Janakiraman) and asked ‘How a literature should be?’

Without a second thought, that literary icon, gave a book to Jayakanthan and said, ‘Literature should be like this!’. The title of that book was ‘Janani’ by La.Sa.Ra.

 
Interestingly, ‘Janani’ was his first short story collection published in the year 1952. I read all the stories in this collection. However I liked the story ‘Janani’ very much. It is close to my heart.

But why Janani?

Before getting into the reason, why I like this story very much, we should know what the story about.

It is a story about, Goddess Parvathi, (sometimes referred to as Ambaal), who wants to born in the earth and to experience the mundane human life. She born to an illicit couple, who left the baby near a pond and eloped.

A temple priest finds the baby and took her to his house. Since, he doesn’t have a child, he adopts the infant as his child and named her as Janani. As a woman, Janani witnesses various kinds of tortures, challenges and confused with her own life.

She got married and what happens next makes the story, a thoughtful one.

So, why I like this story? It simply because I am in love with a girl named Janani. As like the story got attracted me at the very first read, the girl Janani too attracted me at first sight. She then swept me off my feet!

She is also like Goddess Ambaal and the love I have for her is unconditional love. La.Sa.Ra., said in one of his interviews that ‘Love is a tremendous accident!’. That phrase is exactly true, upto me.

Finally, in the same interview he says, ‘Life is nothing but to show our kindness and love to someone!’ I am contemplating these words everytime and I like to make my life more meaningful by loving her… and hence, I love you Janani!

Tuesday, September 8, 2015

"மோடி செய்வது கிளைமேட் ஆசனம்!"- சுற்றுச்சூழல் முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நேர்காணல்



ந.வினோத் குமார்
பதிப்புத் தேதி: ஆகஸ்ட் 29, 2015
 
அரசியலில் சவாலான சில அமைச்சகங்கள், விஷய ஞானம் உள்ள சிலருக்குச் சில நேரம் கிடைத்துவிடுவதுண்டு. அப்படி ஒரு சவாலான அமைச்சகம், மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை. கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது ஜெய்ராம் ரமேஷுக்குக் கீழ் இந்த அமைச்சகம் 2009-ல் செயல்பட்டது. சுற்றுச்சூழல் சட்டங்கள் சமீபகாலத்தில் ஓரளவுக்காவது கடைப்பிடிக்கப்பட்டன என்றால், அதற்கு ஜெய்ராம் ரமேஷ் இட்ட அடித்தளம்தான் காரணம்.

அந்த அமைச்சகத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டதே, அவர் ஒரு சிறந்த ஆட்சியாளர் என்பதற்குச் சான்று. திறமையான ஆட்சியாளர்கள் அடிக்கடி இடமாற்றலுக்கு உள்ளாவது 'அரசியலில் சாதாரண விஷயம்'தானே!

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டம் குறித்து 'லெஜிஸ்லேட்டிங் ஃபார் ஜஸ்டிஸ்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

தான் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த காலம் பற்றி 'கிரீன் சிக்னல்ஸ்' எனும் தலைப்பில் சமீபத்தில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ள அவர், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் 90-வது பிறந்தநாள் விழாவுக்காகச் சென்னை வந்திருந்தபோது பேசியதிலிருந்து...

நீங்கள் அமைச்சராக இருந்தபோது, பி.டி. கத்திரிக்காய் ஆய்வுகளுக்குத் தடை விதித்தீர்கள். தற்போது பி.டி. பருத்தி பயிர் செய்யப்பட்ட இடங்களில்தான் விவசாயிகள் தற்கொலை அதிகமாக நடப்பதாக அமெரிக்க ஆய்வு ஒன்று கூறுகிறது. நீங்கள் இதை எப்படி அணுகுகிறீர்கள்?

நாட்டில் இன்று 98 சதவீத விவசாயிகள் பி.டி. பருத்தியை விளைவிக்கிறார்கள். ஏனென்றால், அவர்களுக்குப் பணம் தேவை. எங்கெல்லாம் பாசன வசதி உள்ளதோ, அங்கெல்லாம் பி.டி. பருத்தி நல்ல லாபத்தைக் கொடுத்தது. ஆனால், பெரும்பாலான விவசாயிகள் மழையை எதிர்பார்த்திருக்கும் இடங்களில், அதை விளைவித்தார்கள். அங்கே பலன் கிடைக்கவில்லை. அதனால்தான் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது அங்கே அதிகமாக நடக்கிறது.

2002-ம் ஆண்டு பி.டி. பருத்தி அறிமுகம் செய்யப்பட்டபோது, பருத்தி விளைச்சல் சுமார் 20 சதவீதம் அதிகரித்தது என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். இதையெல்லாம் பயன்படுத்தாதீர்கள் என்று விவசாயிகளைக் கட்டாயப்படுத்துவதற்கு, நாம் கம்யூனிச நாடு கிடையாது.

தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தைக் கொண்டுவந்ததே நீங்கள்தான். 'ஆனால், அது என் மீதே பல நேரங்களில் குற்றம் சுமத்தியிருக்கிறது' என்று உங்கள் புத்தகத்தில் கூறியிருக்கிறீர்கள். அதனுடைய இப்போதைய செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?

நீங்கள் குறிப்பிடும் குற்றச்சாட்டு மஹான் நிலக்கரி சுரங்க நிறுவனம் தொடர்பானது. ஒரு பக்கம் அந்த நிறுவனம், ‘சுரங்கப் பணிகளில் ஈடுபடுவதற்குத் தேவைப்படும் அனுமதியை ஜெய்ராம் வழங்கவில்லை' என்று குற்றம்சாட்ட, இன்னொரு பக்கம்அந்த நிறுவனத்துக்கு அனுமதி வழங்க நான் முயற்சிக்கிறேன்' என்று பசுமைத் தீர்ப்பாயம் குற்றம் சாட்டியது.
பசுமைத் தீர்ப்பாயம் என்பது சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை மட்டுமே விசாரிப்பதற்கான ஒரு நீதிமன்றம். அது சுதந்திரமாக இயங்க வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே, நான் கூறி வந்திருக்கிறேன். இப்போதும் அவை அப்படியே இயங்கிவருகின்றன.


மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் (ஜி.டி.பி.) பதிலாகதேசியப் பசுமைக் கணக்கு' (கிரீன் நேஷனல் அக்கவுண்ட்ஸ்) கணக்கிடப்பட வேண்டும் என்று கூறிவருகிறீர்கள். இந்தியாவில் இது சாத்தியம்தானா?

நாம் இன்று ஜி.டி.பி.யை மட்டுமே கணக்கிட்டு வருகிறோம். ஆனால், அந்த உற்பத்தி அளவை அடைவதற்காக நாம் சுற்றுச்சூழலை எவ்வளவு அழித்திருக்கிறோம் என்பது குறித்துக் கணக்கிடுவதில்லை. அவ்வாறு நாம் இழந்த சுற்றுச்சூழல் வளத்தைக் கணக்கிட வேண்டும். அப்படிச் செய்தால்தான், அந்த வளத்தை நாம் நிர்வகிக்க முடியும். அப்போதுதான், அந்த வளம் காப்பாற்றப்படும். ஆனால், இதற்கு அரசியல் ஆதரவு அத்தியாவசியம்.

நீங்கள் அமைச்சராக இருந்தபோது டாடா குழுமத்துக்கு உதவுவதாகக் கிரீன் பீஸ் அமைப்பு குற்றம்சாட்டியது. இப்போது அந்த அமைப்பே தடை செய்யப்பட்டுள்ளதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

மாற்றுக் கருத்து கொண்ட தொண்டு நிறுவனங்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். ஆனால் இன்றுதான், என்.ஜி.. நிறுவனங்களை என்.. ஜி.. (NGO - NO GO), அதாவது, ‘நோ கோ' நிறுவனங்களாக மோடி அரசு மாற்றிவிட்டதே!

மத்திய அரசு, டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் நியமித்தஉயர்நிலைக் குழு' அறிக்கை சூழலைச் சூறையாடுவதாக அமைந்திருக்கிறதே. இதற்குக் காங்கிரஸிடமிருந்து எந்த எதிர்ப்பும் வந்ததாகத் தெரியவில்லையே?

நம் நாட்டில் இருக்கும் சுற்றுச்சூழல் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்வதற்கான அறிக்கையாகத்தான், அந்தக் குழுவின் அறிக்கை அமைந்துள்ளது. அந்த அறிக்கையின் பரிந்துரைகளைச் செயல்படுத்தினால் பேரழிவுதான் ஏற்படும். ‘இப்படி அறிக்கை வேண்டும்' என்று அந்தக் குழுவுக்கு மத்திய அரசு கட்டளையிட்டது. அப்படியே செய்திருக்கிறார்கள், அவ்வளவுதான்!

பா... அரசு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பெயரைசுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம்' என்று மாற்றியிருப்பதன் மூலம் சூழலியலைப் பாதுகாப்பதில், அதிக அக்கறையுடன் இருப்பதாகக் காட்டிக்கொள்கிறது. இந்த யோசனை ஏன் காங்கிரஸுக்குத் தோன்றவில்லை?

இப்படி அமைச்சகத்தின் பெயரை மாற்றுவதெல்லாம் ஏமாற்று வேலை. பருவநிலையைச் சமாளிப்பதில் இந்த உலகத்துக்கே வழிகாட்டியாக, இந்தியா இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், உள்நாட்டிலோ இயற்கை வளத்தை அழிக்க முயற்சிக்கும் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியத்தின் அறிக்கையைச் செயல்படுத்த நினைக்கிறார். ஒன்று நேராக இருக்க, இன்னொன்று தலைகீழாக இருக்கிறது. இதன்படி, மோடி செய்வதுகிளைமேட் ஆசனம்'!

சமீபத்தில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பசுங்குடில் வாயுக்களை வெளியேற்றுவதில் இந்தியா அதிகப் பங்கு வகிப்பதாகக் கூறியிருந்தது. அதைச் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுத்தார். உங்கள் கருத்து?

பிரகாஷ் ஜவடேகர் மறுத்தது சரியே! காரணம், இன்று உலக அளவில் பசுங்குடில் வாயு வெளியேற்றத்தில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. இந்தியா வெளியிடும் பசுங்குடில் வாயுவின் சதவீதம் 6 சதவீதம் மட்டுமே. 29 சதவீதத்துடன் சீனா முதலிடத்திலும், 16 சதவீதத்துடன் அமெரிக்கா இரண்டாம் இடத்திலும், 11 சதவீதத்துடன் ஐரோப்பிய யூனியன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. 5 சதவீதத்துடன் ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது.

ஆனால், சுற்றுச்சூழல் சட்டங்களை மதிக்காமல் காடுகளை எல்லாம் அழிக்கும் நிலை தொடர்ந்தால், 2030-ம் ஆண்டு 15 சதவீதத்துடன் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கும். அப்போது அமெரிக்கா வெளியேற்றும் பசுங்குடில் வாயு சதவீதம் குறைந்திருக்கும்.

டிசம்பரில் பாரிஸ் நகரத்தில் நடக்கும் பருவநிலை மாற்றம் தொடர்பான விவாதக் கூட்டத்தில் இந்தியா எவ்வாறு செயலாற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

பருவநிலை மாற்றத்தைப் பொறுத்தவரையில் வேறு எந்த நாட்டைவிடவும் இந்தியாவுக்கு அதிக ஆபத்துகள் இருக்கின்றன. முதலாவதாக, நாம் பருவ மழையை நம்பியிருக்கிறோம். இரண்டாவதாக, இமயமலையில் உள்ள பனிக்கட்டிகள் உருகிக்கொண்டேவருகின்றன. மூன்றாவதாக, நமது பொருளாதார வளர்ச்சிக்காகக் காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை அழித்து வருகிறோம். நான்காவதாக, நமது நாட்டில் பெரும்பாலான மக்கள் கடற்கரையோரம் வாழ்ந்து வருகிறார்கள். பருவநிலை மாற்றத்தின் பாதிப்பு இந்த நான்கின் மீதும் இருக்கும். அப்போது நம்மால் எதிர்கொள்ள முடியாத விளைவுகள் ஏற்படும்.

இந்நிலையில் தற்போது எல்லோரின் கண்களும் இந்தியாவின் மீதுதான் இருக்கின்றன. 2030-ம் ஆண்டுக்குள் தாங்கள் வெளியிடும் பசுங்குடில் வாயுக்களின் அளவைக் குறைத்துவிடுவோம் என்று சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சமீபத்தில் அறிவித்துள்ளன.

இந்தியா தனது நிலை குறித்து, இன்னும் ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற டிசம்பர் மாதக் கூட்டத்தில், இந்தியா மூன்று அறிவிப்புகளைச் செய்யலாம் என்று கூறப்படுகிறது. ஒன்று, கோபன்ஹேகன் கூட்டத்தில் பசுங்குடில் வாயுவை 25 சதவீதமாக 2020-ம் ஆண்டுக்குள் குறைப்போம் என்று இந்தியா முடிவெடுத்தது. 2020 எனும் அந்தக் கால அளவை நீட்டிப்போம் என்று இந்தியா அறிவிக்கலாம்.

இரண்டாவது, 2022-ம் ஆண்டுக்குள் மரபுசாரா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அளவை அதிகரிப்போம் என்று அறிவிக்கும். இன்று இந்த எரிசக்தி 30 கிகாவாட் அளவில் இருக்கிறது. இதை 2022-ம் ஆண்டுக்குள் 195 கிகாவாட் ஆக உயர்த்துவோம் என்று அறிவிக்கும்.

மூன்றாவதாக, நமது எரிபொருள் சிக்கனத்தை 25 சதவீதமாக அதிகரிப்போம் என்று அறிவிக்கும்.

ஆனால், நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதைக் குறைப்போம் என்பதை மட்டும் இந்தியா இப்போதைக்கு அறிவிக்காது.

காங்கிரஸ் கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் 'emergency clause' பிரிவின் கீழ் நில உரிமையாளர்களிடமிருந்து அனுமதி பெறாமல் நிலத்தை எடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், எவையெல்லாம் 'எமர்ஜென்ஸி' என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. இதைப் பா... தவறாகக் கையாளக்கூடிய வாய்ப்பு இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?

காங்கிரஸ் கொண்டுவந்த சட்டத்தில் இயற்கைப் பேரிடர் சமயங்களின்போதும், ராணுவத் திட்டங்களுக்காகவும் என இரண்டு விஷயங்களுக்காக மட்டுமே 'எமர்ஜென்ஸி' பிரிவைப் பயன்படுத்தி நிலம் கையகப்படுத்த வழிவகை இருந்தது.

ஆனால், பா... கொண்டுவரும் சட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்காகக்கூட மேற்கண்ட பிரிவைப் பயன்படுத்தி நிலத்தை அபகரிக்கலாம். இது 1894-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் இருந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைத் திரும்பவும் கொண்டுவரும் முயற்சி. ஆனால் இப்போதுதான் அவர்கள் (பா...) ‘யூ டர்ன்' அடித்து நிற்கிறார்களே. அதனால் புதிதாகக் கொண்டுவரும் மசோதாவில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்


உணவு உற்பத்தியில் நாம் எப்போது தன்னிறைவு அடைவோம்?

தன்னிறைவு அடைவதை விடுங்கள். நிச்சயமாக உணவை முன்பைவிட அதிகளவு பெருக்கி யிருக்கிறோம். ஆனால், அதை முறையாக விநியோகிப்பதில்தான் பிரச்சினை. அதைக் களைந்தாலே நாட்டில் வறுமையை ஓரளவு சமாளித்துவிட முடியும்!

எந்த அமைச்சகத்துக்குப் பொறுப்பேற்றாலும் அங்கு முதலில் கண்ணாடிக் கதவுகளை வைப்பேன்’, என்று உங்கள் புத்தகத்தில் சொல்லியிருக்கிறீர்கள். அதே அளவு வெளிப்படைத்தன்மையை நீங்கள் காட்டியிருப்பதாக நினைக்கிறீர்களா?

நிச்சயமாக! என்னுடைய அமைச்சரவை காலத்தில் நான் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டிருக்கிறேன். ஆனால் அந்தக் கண்ணாடிக் கதவுகள், இப்போது எதுவும் தெரியாத மரக் கதவுகளாகி விட்டன!

நன்றி: தி இந்து (சில மாற்றங்களுடன்)